மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் மாசி பெருவிழா வரும் 24ல் தொடங்குகிறது

வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2017      விழுப்புரம்

செஞ்சி,

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்துள்ள அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் மாசி பெருவிழா வரும் 24-ம் தேதி தொடங்கி 8-3-2017 வரை 13 நாட்கள் நடைபெறுகிறது. 24-ம் தேதி மஹாசிவராத்திரி அன்று கோபால விநாயகர் பூஜையுடன் கொடியேற்றம் நடைபெறுகிறது. 25-ம் தேதி காலை 11 மணிக்கு மயானக்கொள்ளை நிகழ்ச்சியும், 26-மற்றும் 27-ம்தேதிகளில் அம்மன் தங்க நிற பல்லக்கிலும் திருவீதியுலா நடைபெறுகிறது. 28-ம் தேதி மாலை 4.45 மணிக்குமேல் தீ மிதி விழா நடைபெறுகிறது. 2-ம் தேதி முக்கிய திருவிழாவான திருத்தேர் வடம் பிடித்தல் நடைபெறுகிறது. இதில் முக்கிய திருவிழாவாக மயானக்கொள்ளை, தீ மிதி விழா, திருத்தேர் வடம் பிடித்தல் ஆகியவையாகும். இந்த நாட்களில் ஆயிரகணக்கான பக்தர்கள் விழுப்புரம் மற்றும் வெளி மாவட்டங்களில் வருகை புரிவர்.இந்த நாட்களில் அரசு சிறப்பு பேரூந்துகளை இயக்க உள்ளது. மேலும் அடிப்படை வசதிகளான குடி நீர் மற்றும் கழிப்பிட வசதி, பக்தர்கள் தங்கும் இடம் ஆகியவற்றிற்கான விரிவான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அ.இரா.பிரகாஷ் மற்றும் அறங்காவலர் ர.ஏழுமலை பூசாரி உள்ளிட்ட ஏழு தலைமுறை அறங்காவலர்கள்செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: