வேலூர் மற்றும் அணைக்கட்டு வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்கள்:கலெக்டர் சி.அ.ராமன், ஆய்வு

சனிக்கிழமை, 18 மார்ச் 2017      வேலூர்
ph vlr

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் இன்று (18.03.2013) பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை பராமரிப்பில் உள்ள அரசு புறம்போக்கு குளங்களிலிருந்து விவசாய பயன்பாட்டிற்காக மண் வண்டல் மண் சவுடு கிராவல் ஏனையவை இலவசமாக எடுக்க அனுமதி வழங்க சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. இந்த சிறப்பு முகாமினை அணைக்கட்டு மற்றும் வேலூர் வட்டாட்சியர் அலுவலகங்களில் கலெக்டர் சி.அ.ராமன், நேரடியாக சென்று பார்வையிட்டார். இம்முகாமில் வேலூர் மாவட்டத்தில் அரசு புறம்போக்கு குளங்களிலிருந்து மண் வண்டல் மண் சவுடு கிராவல் ஏனையவை எடுக்க தகுதி வாய்ந்த 224 குளம், கண்மாய்களிலிருந்து விவசாய தேவைகளுக்காக எந்தவித கட்டணமும் செலுத்தாமல் எடுத்து கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. தற்போது ஒவ்வொரு வட்டாரத்திலும் முதற்கட்ட முகாமில் 5 ஏரிகள் தேர்வு செய்யப்பட்டு அவற்றிலிருந்து மண் எடுத்து விவசாய நிலத்தை சமன் செய்யவும், மேம்படுத்தவும் விவசாயிகள் இலவசமாக மண் வகைகளை எடுத்து பயன்படுத்திக்கொள்ள இந்த சிறப்பு முகாம் மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் மணல் இருப்பின் மணல் எடுக்க அனுமதி இல்லை. குளம் மற்றும் கண்மாயில் ஊரக வளர்ச்சித் துறையால் குறிப்பிடப்பட்ட பகுதிகள் தவிற வேறு இடத்தில் மண் வகைகளை எடுக்க அனுமதி வழங்கப்படவில்லை என்பதை வட்டாட்சியர்களிடம் கலெக்டர் கேட்டறிந்து, மேலும் பிற ஏரிகளில் இருந்து மண் வேண்டுமென்று கோரும் விவசாயிகளிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டு அடுத்த கட்ட முகாம்களில் அவற்றை சேர்த்துக் கொண்டு விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்ற வேண்டுமென்று வட்டாட்சியர் மற்றும் பொதுப்பணித்துறை அலுவர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களிடம் கலெக்டர் தெரிவித்தார்.இதனை தொடர்ந்து அணைக்கட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் முதியோர் உதவித் தொகை விண்ணப்பங்கள் மற்றும் பதிவேடுகளை ஆய்வு செய்து, மனுதாரர்கள் கேட்டும் வினாக்கள் குறித்தும், அதற்கு பதில் அளித்தது குறித்தும் கலெக்டர் அலுவலர்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார். பின்னர் நில அளவை அலுவலகத்தில் (சர்வே) நல அளவை மனுக்களின் தற்போதைய நிலை குறித்தும், நிலுவையிலுள்ள நில அளவை மனுக்களின் மீது இம்மாத இறுதிக்குள் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கலெக்டர் சி.அ.ராமன், அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த நிகழ்ச்சிகளின் போது அணைக்கட்டு வட்டாட்சியர் உஷாராணி, வேலூர் வட்டாட்சியர் (பொ) இளஞ்செழியன், தலைமையிடத்து வட்டாட்சியர் மோகன், மற்றும் வருவாய்த் துறை அலவலர்கள் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்: