முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ 62 லட்சம்:

வெள்ளிக்கிழமை, 24 மார்ச் 2017      விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன்  கோயில் உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் ரூ 62 லட்சத்தை  செலுத்தியிருந்தனர்.மிகவும் பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் நடைபெற்று வரும் அமாவாசை திருவிழாவில் சுமார் 2 லட்சம் பக்தர்கள் கூடுவது வழக்கம். இதைத்தவிர தினமும் ஆயிரகணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்கின்றனர்.இந்நிலையில்  ஆண்டுதோறும் நடைபெறும் மாசிப்பெருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதனை தொடர்ந்து கடந்தமாதம் மாசி பெருவிழா பிப்ரவரி 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து 13 நாட்கள் நடைபெற்றது. விழாவில் தமிழகம் மற்றும் ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி் உள்ளிட்ட பகுதிகளில் இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.பக்தர்கள் உண்யலில் நேர்த்திகடனை காணிக்கையாக  செலுத்தி விட்டு செல்வது வழக்கம்.மாசிபெருவிழா முடிந்த நிலையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடர்ந்து செவ்வாய் அன்று தொடங்கி புதன் அன்று முடிவு பெற்றது.இதில்   ரூ. 62 லட்சத்து 75ஆயிரத்து 701.   தங்க நகை 287 கிராம் மற்றும் வெள்ளி 846 கிராம் ஆகியவற்றை பக்தர்கள் செலுத்தியிருந்தனர்.உண்டியல் எண்ணும் பணியில் மேல்மலையனூர் உதவி ஆணையர்கள் ஏ.ஆர்.பிரகாஷ் அறங்காவலர் குழு தலைவர் ஏழுமலை, கோயில் மேலாளர் மணி, உள்ளிட்ட பணியாளர்கள் ஈடுபட்டிருந்தன்ர.பாதுகாப்பு பணியில் வளத்தி போலீஸார் ஈடுபட்டிருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago