முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருணாநிதி பிறந்தநாள் விழாவில் பங்கேற்க நிதிஷ், லல்லு சம்மதம்

சனிக்கிழமை, 6 மே 2017      அரசியல்
Image Unavailable

சென்னை  - தி.மு.க தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதற்கு ராஷ்டிரீய ஜனதா தள கட்சித் தலைவர் லல்லு பிரசாத் யாதவ், பிகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.  ஜனாதிபதி தேர்தல் ஜூலை மாதம் நடைபெறவுள்ள நிலையில் பாஜகவுக்கு எதிராக வலுவான அரசியல் சக்தியைத் திரட்ட நிதிஷ் குமாரும், லல்லு பிரசாத் யாதவும் முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில், கருணாநிதியின் பிறந்தநாளில் கலந்து கொள்வதன் மூலம் பாஜகவுக்கு எதிராக அரசியல் சக்தி இருக்கிறது என்பதை உணர்த்த லல்லு - நிதிஷ் திட்டமிடப்பட்டிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.  இதன் அடிப்படையிலேயே விழாவில் பங்கேற்க இருவரும் இசைவு தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது. முன்னதாக, கருணாநிதி பிறந்தநாள் விழாவில் பங்கேற்பதற்காக லல்லு பிரசாத் யாதவை நேரில் சென்று சந்தித்து அழைப்பு விடுத்தார் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி. அதனை லல்லுவும் ஏற்றுக்கொண்டதாக ஆர்ஜேடி கட்சி வட்டாரம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago