சிதம்பரம் பணிமனையில் 100 சதவீத பேருந்துகள் இயக்க நடவடிக்கை கே.ஏ.பாண்டியன் எம்.எல். ஏ.உறுதி

செவ்வாய்க்கிழமை, 16 மே 2017      கடலூர்
chithamparam mla bsu stand visit 2017 05 17

சிதம்பரம் அரசு போக்குவரத்து பணிமனையில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் ஆய்வு செய்து பேருந்துகள் தடையின்றி இயங்கிட நடவடிக்கைகள் மேற்கொண்டார். அரசு பேருந்துகளை முழுவீச்சில் இயக்கி செய்தியாளர்களிடம் சட்டமன்ற உறுப்பினர் தெரிவிக்கையில்,

நிலுவை தொகை வழங்க ஒப்புதல்

தமிழகத்தில் ஒருசில போக்குவரத்து தொழிற்சங்கள் அறிவித்திருந்த வேலைநிறுத்தப் போராட்டம் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழக அரசு மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளால் தோல்வியடைந்து மாநிலம் முழுவதும் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை. போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தமிழக அரசு ரூ.1,250 கோடி நிலுவை தொகை வழங்கிட ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இதனை பெரும்பாலான தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொண்டு பணிக்கு திரும்பு உள்ளனர்.

70 சதவீத பேருந்து இயக்கம்

இதன் மூலம் சிதம்பரம் அரசு போக்குவரத்து கழக பேருந்து பணிமனையில் இன்று காலை முதல் 70% அதிகமான பேருந்துகள் இயக்கப்படுகின்றது. எஞ்சிய பேருந்துகளை இயக்கிட தேவயான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதுபோல் பேருந்துகள் முழு வீச்சில் இயக்கிட தேவையான தகுதி வாய்ந்த ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் தினகூலி அடிப்படையில் நியமிக்கப்படும். இதன் மூலம் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பலர் பங்கேற்பு

ஆய்வின் போது மாவட்ட கழக அவைத்தலைவர் எம்.எஸ்.என்.குமார், சிதம்பரம் நகர கழக செயலாளர் ஆர்.செந்தில்குமார், ஒன்றிய கழக செயலாளர் அசோகன், அவைத்தலைவர் ராசாங்கம், தலைமை கழக பேச்சாளர் தில்லை கோபி,மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் முருகையன், மு.ஒன்றிய கழக செயலாளர்கள் ராதாகிருஷ்ணன். சுப்பிரமணியன், கனகராஜன், நகர இளைஞரணி செயலாளர் கருப்பு ராஜா, ஒன்றிய இளைஞரணி செயலாளர் செழியன், நிர்வாகிகள் வீரமணி, தன.ராஜேந்திரன், ஏசுராஜ், கோதண்டம், கனேஷ், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் சந்திரசேகரன், சச்சிதானந்தம், போக்குவரத்து பணிமனை மேலாளர் பரிமளம் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: