முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குற்றாலத்தில் உலக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி

புதன்கிழமை, 7 ஜூன் 2017      திருநெல்வேலி

குற்றாலத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தி இந்தியன் லைட் ஹவுஸ் டிரஸ்ட், மற்றும் இலஞ்சி இராமசாமி பிள்ளை மேல்நிலைப்பள்ளியின் தேசிய பசுமைப்படை மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நiபெற்றது.

 சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

பேரணிக்கு இலஞ்சி இராமசாமி பிள்ளை மேல்நிலைபபள்ளி தலைமை ஆசிரியர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். குற்றாலம் பேரூராட்சியின் செயல் அலுலர் லிங்கராஜ், தி இந்தியன் லைட் ஹவுஸ் டிரஸ்ட் நிர்வாகி அப்துல் ரகுமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார் வரவேற்று பேசினார் பேரணியை மாவட்ட கல்வி அலுவலர் சுடலை மற்றும் குற்றாலம் காவல் நிலைய ஆய்வாளர் ஜானகி ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.இந்த நிகழ்ச்சியில் குற்றாலம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி, இலஞ்சி பள்ளியின் என்.எஸ்.எஸ். அலுவலர் சிவசுப்பிரமணியன், தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் விஜயலெட்சுமி ஆகியோர் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்து பேசினார்கள்.

விழிப்புணர்வு

தொடர்ந்து குற்றாலம் சிறுவர் பூங்காவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. மேலும் தடைசெய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களின்  உபயோகத்தால் விலங்குகள் எவ்வாறு செத்துமடிகின்றன  என்பது குறித்த நாடகமும் நடத்தப்பட்டது. மாவட்ட என்.எஸ்.எஸ். தொடர்பு அலுவலர் ஜீவர் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து