தமிழக அரசு ஜவுளிக் கொள்கை வெளியிட தயாரிப்பு கருத்துக் கேட்புக் கூட்டம் கோவையில் இன்று நடக்கிறது

புதன்கிழமை, 2 ஆகஸ்ட் 2017      கோவை

தமிழக அரசு,  ஜவுளிக் கொள்கை வெளியிடும் தயாரிப்பின் கருத்து கேட்பு கூட்டம் வருகிற ஆகஸ்ட் மூன்றாம் தேதி கோவையில் நடத்துகிறது.
இக்கூட்டத்தின் மூலம் தமிழக அரசு மிக விரைவில் ஜவுளிக் கொள்கையை வெளியிடும் என்ற எதிர்பார்ப்பும்,இதன்மூலம் தென்மாவட்டங்கள் உட்பட பல மாவட்டங்களிலும் ஜவுளிப் பூங்காக்கள் அமையவும்,வேலை வாய்ப்பு பெருகும் வாய்ப்பும் உள்ளதாக திருப்பூர் பின்னலாடைத் தொழில்துறையினர் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

வேலை வாய்ப்பு

திருப்பூரின் பின்னலாடை தொழில் வளர்ச்சியின் காரணமாக,தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் ,பல்லாயிரக்கணக்கானவர்கள் தொழில் துவங்கியும்,வேலைவாய்ப்பு பெற்றும் உள்ளனர்.
மேலும் தொழில் வாய்ப்பு அதிகமாக உள்ளதால்,தொழில் நிறுவனங்களை விரிவுபடுத்த திருப்பூர் பகுதியில் போதுமான இடவசதி இல்லாததால்,வெளி மாவட்டங்கள்,வெளி மாநிலங்களை நோக்கி செல்லவேண்டியுள்ளது. ஒடிசா,தெலுங்கானா,கர்நாடகா போன்ற வெளி மாநில அரசுகள்,சலுகை திட்டங்களுடன் ஜவுளி கொள்கை வகுத்து ஆயத்த ஆடை துறையினரை தங்கள் வசம் ஈர்க்க முயற்சித்து வருகின்றது.
சில நிறுவனங்கள் வெளி மாநிலங்களில் தொழில் துவங்க விரும்பினாலும்,பெரும்பாலான நிறுவனங்கள் தமிழகத்திலேயே விரிவாக்கம் செய்ய விரும்புகின்றனர்.

கருத்து கேட்பு கூட்டம்

இதற்கான தருணம் தற்போது தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டு,தமிழக அரசின் ஜவுளிக்கொள்கை வெளியிடும் கருத்துகேட்ப்பு கூட்டம் வருகிற மூன்றாம் தேதி கோவையில் நடத்தப்படவுள்ளதால்,தொழிலாளர்கள் அதிகம் உள்ள வேலை வாய்ப்பு குறைவாக உள்ள தென் மாவட்டங்களை தேர்வு செய்து,இடம் கையகப்படுத்தி,அனைத்துவகை கட்டமைப்புகளுடன் ஆயத்த ஆடை துறை ஜவுளி ஜவுளிப் பூங்கா அமைக்கவும்,தொழிலாளர் திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்கள் அமைக்க உதவ வேண்டும் எனவும்  பின்னலாடைத்துறையினர் எதிர் பார்ப்பதோடு,இதன்மூலம் வேலைவாய்ப்பு பெருகுவதோடு,நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதியில் தமிலகத்தின்பங்களிப்பும் உயரும்,அரசுக்கு வருவாய் பெருகும் எனவும் கருது கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து