முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டம் 214சி-யை ரத்து செய்திட வலியுறுத்தி திருமங்கலத்தில் ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் போராட்டம்:

செவ்வாய்க்கிழமை, 10 அக்டோபர் 2017      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டம் 214சி-யை ரத்து செய்திட வலியுறுத்தி மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர்கள் மத்திய அரசைக் கண்டித்து தொடர் முழக்கப் போராட்டம் நடத்தினார்கள்.
அண்மையில் மத்திய அரசு கொண்டு வந்த மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா 214சி ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளின் வாழ்வாதாரத்தை பாதிப்பதாக அமைந்துள்ளது.இந்நிலையில் தமிழ்நாடு ஓட்டுநர் பயிற்சிப்பள்ளி உரிமையாளர்கள் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு மோட்டார் வாகன தொழில் பாதுகாப்பு ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் மத்திய அரசின் வாகன சட்ட திருத்த மசோதா 214சி-யை ரத்து செய்திட வலியுறுத்தி தமிழகம் முழுவதிலும் மாபெரும் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்பட்டது.இதன் ஒருபகுதியான மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தின் முன்பாக திருமங்கலம் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்து தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது.இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் அனந்தபத்மநாபன் தலைமை வகித்தார்.செயலாளர் கே.முரளிதரன்,பொருளாளர் வீரேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அப்போது ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளின் எதிர்காலத்தை பாதிக்கும் மத்திய அரசின் மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா 214சி-யை ரத்து செய்திட வலியுறுத்தி மத்திய அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.இதில் திருமங்கலம் நகரைச் சேர்ந்த அனைத்து ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து