முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெல்லை பேட்டை நரிக்குறவர் காலனியில் புராஜெக்ட் ஸ்பார்க் திட்டத்தின் கீழ் 221 நரிக்குறவர் மக்களின் மறு வாழ்விக்கு நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 14 நவம்பர் 2017      திருநெல்வேலி
Image Unavailable

திருநெல்வேலி பேட்டை நரிக்குறவர் காலனியில் புராஜெக்ட் ஸ்பார்க் திட்டத்தின் கீழ் நரிக்குறவர் மக்களின் மேம்பாட்டிற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கலெக்டர் சந்தீப் நந்தூரி,  தலைமையில் (14.11.2017) இன்று நடைபெற்றது. இவ்விழாவில் 221 நரிக்குறவ மக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர்  வழங்கினார்.பின்னர் கலெக்டர்  பேசியதாவது:-

நலத்திட்ட உதவிகள்

குழந்தைகள் தினத்தையொட்டி குழந்தை தொழிலாளர் நல அலுவலகம் மற்றும் ஸ்காட் தொண்டு நிறுவனத்தின் மூலம் நரிக்குறவர் மக்களின் மேம்பாட்டிற்காக நலத்திட்ட உதவிகள் இன்று வழங்கப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் பழங்குடியினர் மற்றும் நரிக்குறவர் மக்களின் மேம்பாட்டிற்காக தொடங்கப்பட்டுள்ள புராஜெக்ட் ஸ்பார்க் திட்டத்தின் ஒரு அங்கமாக இன்று வழங்கப்படுகிறது. சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 உதவி தொகை வழங்குவதற்கான உத்தரவு 18 நபர்களுக்கும், குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்டு) 22 நபர்களுக்கும, வாக்காளர் அடையாள அட்டை 41 நபர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலி கருவி 3 நபர்களுக்கும், சக்கர நற்காலி 2 நபர்களுக்கும், நலவாரிய உறுப்பினர் அடையாள அட்டை 17 நபர்களுக்கும், வாகன ஓட்டுநர் உரிமம் 41 நபர்களுக்கும், ஆதார் அட்டை 48 நபர்களுக்கும், மருத்துவ காப்பீட்டுத்திட்ட அடையாள அட்டை 46 நபர்களுக்கும் என 221 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதி நரிக்குறவ மக்களுக்கு விற்பனையாளர் அடையாள அட்டை 172 நபர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. அரசின் திட்டங்கள் அனைத்தும் இப்பகுதியின் மேம்பாட்டிக்கு செயல்படுத்தப்படும். நீங்கள் உங்களின் குழந்தைகளை கண்டிப்பாக உயர் கல்வி வரை படிக்க வைக்க வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் நரிக்குறவயினத்தை சேர்ந்த பள்ளிக்கு செல்லாத சக்தி என்ற இளைஞர் 25  நரிக்குறவ சமுதாய குழந்தைகளை படிக்க வைத்துள்ளார். அவர்க்கு உலக அளவிலான ஒரு தொண்டு நிறுவனம் பரிசு வழங்குகிறது. உங்களின் குழந்தைகள் சிறப்பாக படிக்கவைத்தால்  தான் நல்ல பல வேலைகளுக்கு செல்ல முடியும் உங்கள் குழந்தைகளில் ஒருவர் மாவட்ட ஆட்சித்தலைவராக வந்தால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும். இப்பகுதி குழந்தைகளின் படிப்பிற்காக ஸ்காட் நிறுவனம் பள்ளி தொடங்கி  படிக்க வைப்பதுடன் நல்ல பல ஆலோசனைகளையும், உயர் கல்விக்கு தோவையான ஏற்பாடுகளையும் செய்து வருவது மகிழ்ச்சியான ஒன்றாகும் நீங்கள் அனைவரும் உங்களது குழந்தைகளை அவசியம் உயர் கல்வி வரை படிக்க வைத்து சமுதாயத்தை உயர்த்திட வேண்டும். என பேசினார்.

இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) இளம்பகவத்,  குழந்தை தொழிலாளர் நல திட்ட இயக்குநர் சந்திரகுமார், ஸ்காட் நிறுவன பொது மேலாளர் இக்னேசியர் சேவியர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் மகேஸ்வரன், திருநெல்வேலி வட்டாட்சியர் கணேசன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து