முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெல்லை மாவட்ட பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் 6 பயனாளிகளுக்கு ரூ.4.65 லட்சத்திற்கான காசோலைகள் கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்

திங்கட்கிழமை, 18 டிசம்பர் 2017      திருநெல்வேலி
Image Unavailable

திருநெல்வேலி கலெக்டர் அலுவலக வளர்ச்சிமன்ற கூட்ட அரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சந்தீப் நந்தூரி,  தலைமையில் நடைபெற்றது. பொதுமக்கள் ஏராளமானோர் கூட்டத்தில் கலந்து கொண்டு கலெக்டர்அவர்களிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினார்கள்.

குறைதீர்  கூட்டம்

இக்கூட்டத்தில், கலெக்டர் சந்தீப் நந்தூரி,   முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 4 பயனாளிகளுக்கு தலா ரூ.1 இலட்சத்திற்கான காசோலைகளையும், ஒரு பயனாளிக்கு ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையினையும், ஒரு பயனாளிக்கு ரூ.15 ஆயிரத்திற்கான காசோலையினையும், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இரண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் உதவித் தொகை பெறுவதற்கான உத்தரவினை வழங்கினார். மேலும், ராஞ்சியில் நடைபெற்ற தேசிய அளவிலான தடகள மற்றும் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் ப்ளாரன்ஸ் சுவைன்சன் காதுகேளாதோர் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு 3 தங்க பதக்கம் மற்றும் 3 வெள்ளி பதக்கங்களை பெற்ற மாணவ, மாணவியர்கள், ராஞ்சியில் காது கேளாதோருக்கான தேசிய அளவிலான தடகள போட்டிகளில் உயரம் தாண்டுதலில் புதிய சாதனை படைத்த வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வரும் மாணவி சமிஷா பர்வீன் மற்றும் தமிழக அளவில் ஓசூரில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் முதல் இடத்தை பெற்ற 12ம் வகுப்பு மாணவன் டி.பாபு ஆகியோர் கலெக்டர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை, முதிர்கன்னி உதவித் தொகை, விபத்து மரண உதவித் தொகை மற்றும் குடிநீர், சாலை வசதிகள் வேண்டி பல்வேறு மனுக்கள் பெறப்பட்டு, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கொடுக்கப்பட்டு, பரிசீலனை செய்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பூ.முத்துராமலிங்கம், உதவி ஆட்சியர் (பயிற்சி) க.இளம்பகவத், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர்  எஸ். சங்கரலிங்கம், ப்ளாரன்ஸ் சுவைன்சன் காதுகேளாதோர் மேல்நிலைப்பள்ளி பள்ளி தாளாளர் அருள் சாமுல் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து