முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உழவர் பாதுகாப்பு திட்ட பயன்களை பொதுமக்கள் பெற வேண்டும் கலைக்டர் அறிவுரை

வியாழக்கிழமை, 21 டிசம்பர் 2017      திருவள்ளூர்
Image Unavailable

உழவர் பாதுகாப்பு திட்டத்தில் அட்டை வைத்திருப்பவர்கள் இந்த திட்டத்தின் பயன்களை முழுமையாக அறியாமல் விண்ணப்பிக்காமல் இருப்பதால், இது குறித்து வருவாய் துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு தந்து அவர்கள் இந்த திட்டத்தில் அனைத்து பயன்களையும் பெற வழி செய்ய வேண்டும் என கும்மிடிப்பூண்டி அடுத்த சித்தராஜகண்டிகை பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி அறிவுறுத்தினார்.

மகளிர் விவசாயிகள்

கும்மிடிப்பூண்டி அடுத்த சித்தராஜ கண்டிகை பகுதியில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் அதிமுக ஒன்றிய செயலாளர் கோபால்நாயுடு, நிர்வாகிகள் சி.எம்.ஆர்.முரளி, ரமேஷ்குமார், எஸ்.டி.டி.ரவி, இமையம் மனோஜ், திருப்பதி முன்னிலை வகித்தனர்.

கோட்டாட்சியர் முத்துசாமி வரவேற்றார். நிகழ்வில் வருவாய் துறை, சமூக நலத்துறை, கூட்டுறவு துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை, தோட்டக்கலை , வேளாண்மை துறை, மக்கள் செய்தி தொடர்பு துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலம், தேசிய காசநோய் தடுப்பு திட்டம், சுகாதார துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், சித்த மருத்துவம், கல்வி துறை, கால்நடை பராமரிப்பு துறை, மகளிர் விவசாயிகள் மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட துறை சார்ந்த கண்காட்சிகள் அமைக்கப்பட்டதை ஆட்சியர் பார்வையிட்டதோடு முகாமில் அதிகாரிகள் துறை சார்ந்த அரசு திட்டங்களையும் மக்கள் இத்திட்டங்களில் இருந்து பயன் பெறும் முறை குறித்தும் எடுத்துரைத்தனர்.

நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார் பேசுகையில் சித்தராஜகண்டிகை, சிறுபுழல்பேட்டை, புது கும்மிடிப்பூண்டி, பாத்தபாளையம் உள்ளிட்ட ஊராட்சிகள் சிப்காட் தொழிற்பேட்டைக்குள் இருப்பதால் இங்குள்ள தொழிற்சாலைகளால் காற்று மாசு அதிகமாக உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வரும் நிலையில் மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கவும், சிப்காட்டில் உள்ள 300க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் அதிக அளவு வட இந்தியர்களே வேலை செய்து வரும் நிலையில் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து நிகழ்வில் பேசிய மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி பொதுமக்களின் குறைகளை நேரில் கேட்டு நிவர்த்தி செய்யும் வகையில் வாரந்தோறும் திங்கள் கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், மாதம் ஓரு முறை மாவட்டத்தில் ஒரு பகுதியிலும் மக்கள் தொடர்பு முகாம்கள் நடத்தப்படுவதோடு, அந்தந்த வட்டத்தில் 2011ஆம் ஆண்டு முதல் வெள்ளிக்கிழமை தோறும் அம்மா திட்ட முகாம் நடத்தப்படுகிறது என்றும், மாவட்டத்தில் கடந்த ஒன்றரை மாதத்தில் டெங்கு காய்ச்சல் வெகுவாக தடுக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறத்தில் தேவையற்ற பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை வைத்துக் கொள்ள கூடாதென்றும், மாவட்டத்தில் இது வரை சுகாதார சீர்கேட்டுடன் டெங்கு பரவும் வகையில் வீடுகளை வைத்திருந்த 2900 பேரிடம் இருந்து 12லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்றார்.

தொடர்ந்து பேசியவர் திருவள்ளூர் மாவட்டத்தை பிப்ரவரி-2018க்குள் 100 சதவீத தனிநபர் இல்ல கழிவறையை பயன்படுத்துவோர் உள்ள மாவட்டமாக மாற்ற இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில் பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும்,பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், உழவர் பாதுகாப்பு திட்டத்தில் அடையாள அட்டை பெற்றவர்களுக்கு இந்த திட்டத்தின் பயன்கள் குறித்து முழுமையாக தெரியாத சூழலில் இது குறித்து வருவாய் துறையினர் மக்களுக்கு தெரிவித்து அவர்கள் திட்டத்தின் பயன்களை பெற வழிசெய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார். தொடர்ந்து நிகழ்வில் 286 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டாக்கள்,100 பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதியோர், விதவை உதவித் தொகைக்கான ஆணைகளும், 75 பயனாளிகளுக்கு புதிய ரேஷன் அட்டைகளும், 50க்கும் மேற்பட்டோருக்கு வேளாண் துறை மூலம் மரக்கன்றுகள், விவசாய பொருள்கள், விவசாய கருவிகள் வழங்கப்பட்டது.

மேலும் முகாமில் சுகாதார துறை சார்பாக பொது மருத்துவ சிகிச்சை, கண் பரிசோதனை, சக்கரை, ரத்த அழுத்த பரிசோதனை நடத்தப்பட்டது. மக்கள் தொடர்பு முகாமின் முடிவில் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் ஆர்.எஸ்.ராஜகோபால் நன்றி கூறினார். இந்த முகாமில் மாவட்ட வழங்கல் அலுவலர் நாராயணன், வேளாண் துறை உதவி இயக்குனர் தேவேந்திர சிங் பரிதார், வட்டார மருத்துவர் ராஜேஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து