முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரியகுளம் ஸ்ரீபாலசுப்பிரமணிய திருக்கோவிலில் கொடிமரம் நடும் விழா துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்

ஞாயிற்றுக்கிழமை, 29 ஏப்ரல் 2018      தேனி
Image Unavailable

தேனி -  தேனி மாவட்டம் பெரியகுளம் வராகநதிக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீபாலசுப்பிரமணிய திருக்கோவிலில் கொடிமரம் நடும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் கலந்து கொண்டார். அவருடன் ஓ.பி.ரவீந்திரநாத்குமார், வி.ப.ஜெயபிரதீப் உள்ளிட்ட அவருடைய குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். கொடிமரம் நடுவதற்கு முன்பாக சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மேலும் கொடிமரம் அமையும் இடத்தில் நவரத்தினங்கள் வைக்கப்பட்டு கொடிமரம் நடப்பட்டது. ராஜேந்திரசோழீஸ்வரர் சுவாமி சன்னதி முன்பு 33 அடி உயரம் கொண்ட தேக்கு மரத்தால் ஆன கொடிமரம் நடப்பட்டது. அறம்வளர்த்த நாயகி அம்மன் சன்னதி முன்பு 25 அடி உயரம் கொண்ட தேக்கு மரத்தால் ஆன கொடிமரம் நடப்பட்டது. சண்முகர் சன்னதி முன்பு 30 அடி உயரம் கொண்ட தேக்குமரத்தால் ஆன கொடிமரம் நடப்பட்டது. இத்திருக்கோவிலில் புனர் உத்ராணம் எனும் புனரமைக்கும் பணி கடந்த 2013ம் வருடம் துவங்கியது. இக்கோவில் முகப்பு கோபுரம் மொட்டை கோபுரமாக இருந்தது. தற்போது 5 நிலைகள் கொண்டு, 24 அடி கல்ஹாரமும், 48 அடி சுதை உட்பட 72 அடி உயரம் கொண்ட ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.  மேலும் கோவில் உட்புறம் அகலப்படுத்தப்பட்டு சுமார் 50 ஆயிரம் சதுர அடிக்கு கற்கள் பதிக்கும் பணிகளும், சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. மேலும் கோவில் கல்தூண்கள் புதுப்பிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இக்கோவிலில் ராஜேந்திரசோழீஸ்வரர், அறம்வளர்த்தநாயகி, சண்முகர் என மூன்று சுவாமி சன்னதிக்கு முன்பும் கொடிமரம் அமைந்திருப்பது இக்கோவிலின் சிறப்பாகும். இதுபோன்ற மூன்று கொடிமரங்கள் அமைப்பு தமிழகத்தில் வேறு எந்த கோவிலிலும் இல்லை. இக்கொடிமரங்கள் அமைந்துள்ள கல்பீடம் அமைக்கப்பட்டது எப்பொழுது என்று தெரியாத நிலையில் இக்கொடிமரங்கள் கடந்த 1990களில் புதுப்பிக்கப்பட்டது. தற்போது புனரமைப்பு பணிகள் நடப்பதால் கொடிமரங்களை மாற்றி அமைக்க ஸ்தபதியின் ஆலோசனையின்படி நேற்று புதிய கொடிமரங்கள் நடப்பட்டது.
இவ்விழாவில் மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான், தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.பார்த்திபன், மாவட்ட கழக துணை செயலாளர் முறுக்கோடைராமர், பெரியகுளம் நகர செயலாளர் என்.வி.ராதா, தேனி நகர செயலாளர் முருகேசன், பெரியகுளம் ஒன்றிய கழக செயலாளர் அன்னபிரகாஷ், சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் அபுதாஹீர், தேனி ஒன்றிய செயலாளர் ஆர்.டி.கணேசன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் வடுகபட்டி சுந்தரபாண்டியன்,  பெரியகுளம் நகர்கழக துணை செயலாளர் அப்துல்சமது, மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் முருகானந்தம், கூட்டுறவு பண்டகசாலை முன்னாள் இயக்குநர் அன்பு, மாவட்ட பிரதிநிதி சந்தோஷம், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் முத்து, ஆண்டிபட்டி முன்னாள் ஒன்றிய செயலாளர் லோகிராஜன், நகர பாசறையின் துணை செயலாளர் நாராயணன், போக்குவரத்து அண்ணா தொழிற்சங்க நிர்வாகி முபாரக்,  மாவட்ட அண்ணா தொழிற்சங்க கட்டிட பிரிவு தலைவர் கல்பாண்டியன், பழனிச்செட்டிபட்டி தீபன்சக்கரவர்த்தி, துரைப்பாண்டி, வழக்கறிஞர் வெள்ளைச்சாமி, கள்ளிப்பட்டி சிவக்குமார்,  மற்றும் சசிதரன், சிதம்பரசூரியவேலு உள்ளிட்ட கோவில் புனரமைப்பு கமிட்டியினர் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து