முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாம்பன் குந்துகால் மீனவ கிராம பகுதியில் ஆழ்கடல் மீன்பிடி படகுகள் கட்டுவதற்கான கட்டு தளம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா.

ஞாயிற்றுக்கிழமை, 6 மே 2018      ராமநாதபுரம்
Image Unavailable

 ராமேசுவரம்,மே,7: இராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடம் அருகே அமைந்துள்ள குந்துகால் மீனவ கிராமத்தில் ஆழ்கடல் மீன்பிடியினை மீனவர்களுக்கு ஊக்குவித்திடும் வகையில் ஆழ்கடல் மீன்பிடி படகுகள் கட்டுவதற்கான கட்டுதளம்  பணி தொடங்குவதற்காக சிறப்பு பூஜைகள் மற்றும் அடிக்கல் நாட்டுவிழா  நேற்று நடைபெற்றது.
 ராமேசுவரம்,பாம்பன் ஆகிய பகுதி மீனவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் மாற்று தொழிலாக ஆழ்கடல் மீன்பிடிப்பு முறை ஏற்படுத்திட திட்டமி்ட்டு வந்தது.அதன் பேரில் முதல் கட்டமாக தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த எடிசன்,லியோன்,எமரிட்,சேசுராஜா,இன்னாசி,ஜெகன்ராஜ்,கிறிஸ்டி,ஆல்வின்,கெப்பாஸ்,சகாயம் ஆகிய 10 மீனவர்களுக்கு மானியம் மற்றும் வங்கி நிதியுதவியோடு தலா ரூ.80 இலட்சம் மதிப்பில் ஆழ்கடல் மீன்பிடி படகுகள் கட்டுவதற்கு ஆணை வழங்கியுள்ளது.அதன் பேரில் இப்பணிகள் தொடங்குவதற்கு சிறப்பூஜைகள் மற்றும் அடிக்கல் நாட்டுவிழா பாம்பன் குந்துகால் மீனவ கிராம கடலோரப்பகுதியில் நேற்று நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு  மாவட்ட ஆட்சித் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். மீனவ சங்க தலைவர் சேசுராஜா வரவேற்புரை நிகழ்த்தினார். தமிழக மீன்வளத்துறை இயக்குநா் சமீரன் ஆழ்கடல் மீன்பிடிப்பு குறித்து திட்ட விளக்கவுரை அளித்தார். நிகழ்ச்சியில் தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சா் மணிகண்டன் சிறப்பு பூஜை நடத்தி, கட்டு தளம் பணிகள் தொடங்குவதற்காக அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில்  மீன்வளத்துறை கூடுதல் இயக்குநர் அமல்சேவியர், ராமநாதபுரம்  மீன்வளத்துறை துணை இயக்குநர் (பொ) கோபிநாத்,  மீன்வளத்துறை உதவி இயக்குநர்கள் மணிகண்டன்,சிவக்குமார் மற்றும்  விசைப்படகு மீனவ சங்க தலைவர்கள் என்.ஜே.போஸ்,தேவதாஸ், எமரிட்,சகாயம்,தெட்சினாமூர்த்தி,  மற்றும் அரசு அலுவலர்கள், மீனவ சங்க பிரதிநிதிகள் ,பொதுமக்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து