மின்னணு இயந்திரங்களை தனியார் ஊழியர்கள் பரிசோதிக்க எதிர்ப்பு ஆணையம் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதன்கிழமை, 5 செப்டம்பர் 2018      இந்தியா
supreme court 2017 8 3

புது டெல்லி : தேர்தலுக்கு முன் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை தனியார் ஊழியர்கள் பரிசோதிப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக பத்திரிகையாளர் ஆசிஷ் கோயல் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், தேர்தலுக்கு முன் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை பரிசோதிக்க தனியார் ஊழியர்கள் அனுமதிக்கப் படுகின்றனர். இவர்களில் பலர் அரசியல் கட்சிகளில் தீவிரமாக செயல்பட்டு வருபவர்களாக உள்ளனர். இவர்களின் பின்னணி, நம்பகத்தன்மை மற்றும் வாக்குப் பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்து ஆராயப்படுவதில்லை. எனவே இந்த விவகாரத்தில் சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அரசு ஊழியர்களை மட்டுமே வாக்குப் பதிவு இயந்திரங்களை பரிசோதிக்க அனுமதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷன் ஆகியோரை கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், தேவதத் காமத் ஆகியோர் ஆஜராகி, இது ஒரு முக்கியப் பிரச்சினை. இதை நீதிமன்றம் ஆராய வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மனுவுக்கு பதில் அளிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர். மேலும் வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து