முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக வன உயிரின வார விழாவினை முன்னிட்டு வைகை ஆற்றுப்பகுதியில் பிளாஸ்டிக் பைகளை அகற்றி தூய்மைப்படுத்தும் பணி

வெள்ளிக்கிழமை, 5 அக்டோபர் 2018      மதுரை
Image Unavailable

 மதுரை,- மதுரை மாநகராட்சி உலக வன உயிரின வார விழாவினை முன்னிட்டு ஆரப்பாளையம் வைகை ஆற்றுப்பகுதியில் பிளாஸ்டிக் பைகளை அகற்றி தூய்மைப்படுத்தும் பணியினை ஆணையாளர் மரு.அனீஷ் சேகர்  துவக்கி வைத்து தூய்மை பணியில் பங்கேற்றார். 
மதுரை மாநகராட்சியினை தூய்மையான சுத்தமான மாநகராட்சியாக மாற்றுவதற்க்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உலக வன உயிரின வார விழாவினை முன்னிட்டு மதுரை மாநகராட்சியுடன் இணைந்து உசிலம்பட்டி, பசும்பொன் முத்துராமலிங்கதேவர் கல்லூரி, கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரி, மதுரை மீனாட்சி அரசு மகளிர் கல்லூரி ஆகிய கல்லூரிகளின் சார்பில் பிளாஸ்டிக் அகற்றுதல் மற்றும் விழிப்புணர்வு முகாம் ஆரப்பாளையம் பகுதியில் உள்ள வைகை ஆற்றுப்பகுதியில் நடைபெற்றது. இவ்விழிப்புணர்வு முகாமில் உசிலம்பட்டி, பசும்பொன் முத்துராமலிங்கதேவர் கல்லூரி, கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரி, மதுரை மீனாட்சி அரசு மகளிர் கல்லூரி ஆகிய கல்லூரிகளை சார்ந்த சுமார் 200 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு வைகை ஆற்றுப்பகுதியில் பிளாஸ்டிக்  உள்ளிட்ட குப்பைகளை அகற்றி தூய்மைப்பணியில் ஈடுபட்டனர். சேகரிக்கப் பட்ட குப்பைகள் டிராக்டர் மூலம் அகற்றப்பட்டது. 
இந்நிகழ்ச்சியில்  உதவி ஆணையாளர்  அரசு, உதவி செயற் பொறியாளர் முருகேசபாண்டியன்,  உட்பட கல்லூரி ஆசிரியர்கள், மாநகராட்சி பணியாளர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து