முதல்வர் எடப்பாடி முன்னிலையில் அ.ம.மு.க அமைப்பு செயலாளர் அ.தி.மு.க.வில் இணைந்தார்

வெள்ளிக்கிழமை, 31 மே 2019      அரசியல்
AMMK  join ADMK  Edappadi 2019 05 31

சென்னை, அ.ம.மு.க அமைப்பு செயலாளர் அண்ணாமலை, அக்கட்சியில் இருந்து விலகி முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார்.

அ.ம.மு.க அமைப்புச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அண்ணாமலை, அக்கட்சியில் இருந்து விலகி, அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமியை, அவரது இல்லத்தில் நேற்று நேரில் சந்தித்து தன்னை அ.தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.

இந்நிகழ்வின் போது, உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜ், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் ராஜூ, திருநெல்வேலி புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை முன்னாள்செயலாளர்  குற்றாலம் சேகர் ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து