முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் மழை: ஓய்வறைக்குள் நீர் புகுந்ததால் ஊழியர்கள் அவதி

புதன்கிழமை, 26 ஜூன் 2019      ஆன்மிகம்
Image Unavailable

திருப்பதியில் பலத்த மழை பெய்ததால் ஊழியர்கள் தங்கும் ஓய்வறைக்குள் மழை நீர் புகுந்தது.

திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் குளியலறை, கழிவறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளது. திருப்பதியில் கடந்த 2 மாதங்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. இதனால் பக்தர்கள் தவித்து வந்தனர். கடும் வறட்சி காரணமாக திருப்பதியில் உள்ள அணைகள் வறண்டு விட்டது. இதனால் போதிய அளவு தண்ணீர் இல்லாமல் தேவஸ்தானம் அதிகாரிகள் திணறி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக திருப்பதியில் மாலை நேரங்களில் மழை பெய்தது. நேற்று முன்தினம் மாலை பலத்த மழை பெய்தது. சுமார் 3 மணி நேரம் கொட்டி தீர்த்த இந்த மழையினால் லட்டு பிரசாதம் தயாரிக்கும் ஊழியர்களுக்காக நந்தகம் அருகே கட்டப்பட்டுள்ள வகுலமாதா ஓய்வறைக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் ஓய்வறையில் ஊழியர்கள் தங்க முடியாமல் அவதி அடைந்தனர். ஓய்வறைக்குள் நிறுத்தி வைத்திருந்த பைக்குகளும் மழை நீரில் மூழ்கின. இதையடுத்து ஊழியர்கள் மழை நீரை வெளியேற்றினார்கள். திருப்பதியில் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசுவதால் பக்தர்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து