முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரிய எல்லை பகுதியில் கிம் - அதிபர் டிரம்ப் சந்திப்பு

ஞாயிற்றுக்கிழமை, 30 ஜூன் 2019      உலகம்
Image Unavailable

சியோல் : ஓராண்டில் 3-வது முறையாக வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னை அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று சந்தித்தார். 

ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் நடந்த ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள சென்ற அமெரிக்க அதிபர் டிரம்ப், டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு உள்ளிட்ட மிக முக்கியமான சந்திப்புகளை நடத்தி விட்டு, ஜப்பானில் இருந்து தென்கொரியாவுக்கு புறப்படுகிறேன். அங்கு நான் இருக்கும் போது, வட கொரியாவின் தலைவர் கிம் இதை பார்த்தால், நான் அவரை எல்லையில் ராணுவம் விலக்கப்பட்டுள்ள பகுதியில் சந்திப்பேன். அவருடன் கை குலுக்குவேன். ஹலோ சொல்லுவேன் என குறிப்பிட்டுள்ளார்.

கிம்முக்கு டிரம்ப் விடுத்துள்ள அழைப்பை நல்ல யோசனை என வட கொரியா வரவேற்றது. இதனால் இரு தலைவர்களுக்கும் இடையே சந்திப்பு நடைபெறும் என கூறப்பட்டது. எனினும், இரு தரப்பு சந்திப்புக்கு தூதரக ரீதியிலான ஏற்பாடுகள் எதுவும் நடைபெறவில்லை.

இதனிடையே தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் இந்த சந்திப்பு பற்றி கூறும் போது, கொரிய தீபகற்பங்களை பிரிக்கும் ராணுவ படைகள் நீக்கப்பட்ட அடையாள பகுதியாக திகழும் பன்முன்ஜோம் என்ற இடத்தில், அமெரிக்கா மற்றும் வடகொரியா நாடுகளின் தலைவர்கள் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள் என கூறினார்.

அதன்படி, டிரம்ப் வடகொரிய எல்லை பகுதிக்கு நேற்று சென்றார். முன்னாள் எதிரி நாடான வடகொரியாவின் எல்லைக்கு அமெரிக்க அதிபராக இருப்பவர் செல்வது இதுவே முதன்முறை. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பும், வடகொரிய தலைவர் கிம்மும் நேற்று சந்தித்து கொண்டனர். ஓராண்டு காலத்தில் டிரம்பும், கிம்மும் சந்திப்பது இது மூன்றாவது முறையாகும். இந்த சந்திப்பின் போது கிம் மற்றும் டிரம்ப் ஆகிய இருவரும் கைகுலுக்கி கொண்டனர். உடன் இரு நாடுகளின் பிரதிநிதிகளும் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து