கணினிமயமாக்கப்பட்ட மின்தடை நீக்க மையம் அமைச்சர் ஜி.பாஸ்கரன் திறந்து வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 30 ஜூன் 2019      சிவகங்கை
30 TNEB photo-

சிவகங்கை-   சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள தமிழ்நாடு மின்பகிர்மானம் அலுவலகத்தில் கணினிமயமாக்கப்பட்ட மின்தடை நீக்கும் மையம் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.ஜெயகாந்தன், தலைமை வகித்தார். கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர்  .ஜி.பாஸ்கரன்   மின்தடை நீக்கும் மையத்தை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து தெரிவிக்கையில்,
         இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா பொதுமக்கள் முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வந்தாலும் மக்களுக்கு அன்றாடத் தேவையான மின்சாரம் தங்குதடையின்றி வழங்குவதற்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்த தலைவராவார். அவர்களைத் தொடர்ந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களும் மாண்புமிகு அம்மா வழங்கிய திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருவதுடன் மேலும் பொதுமக்களின் தேவைக்கேற்ப புதிய திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார்கள். அதன்தொடர்ச்சியாக தற்பொழுது தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தின் மூலம் கணினிமயமாக்கப்பட்ட மின்தடை நீக்கும் மையம் அமைக்க அரசு உத்தரவிட்டதற்கிணங்க சிவகங்கை மாவட்டத்தில் ரூ.10.80 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கணினிமயமாக்கப்பட்ட மின்தடை நீக்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் மின்இணைப்பில் ஏற்படும் பழுதுகளை சரிசெய்ய இங்கு கட்டணமில்லா தொலைபேசியின் மூலம் புகார் பதிவு செய்யும் வகையில் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்குரிய தொலைபேசி எண்:1912 மற்றும் 1800 5996 1912 என்ற எண்களில் தொடர்பு கொண்டு புகார்கள் தெரிவிக்கலாம். வெளிமாவட்டங்களிலிருந்து புகார்கள் தெரிவிக்க விரும்பினால் கோடு எண்:04575 – 1912 என்ற எண்ணிற்கு தொலைபேசியில் புகார் தெரிவிக்கலாம்.

        மின்பயன்பாட்டிலுள்ள இணைப்புகள் எங்கேனும் பழுதுகள் ஏற்பட்டாலும் அல்லது வீடுகள், கடைகள், நிறுவனங்கள் போன்றவற்றில் மினஇணைப்பு தொடர்பான பழுதுகள் மேற்கண்ட தொலைபேசியில் கட்டணமின்றி புகார் தெரிவிக்கலாம். ஒவ்வொரு புகாரும் கணினியின் மூலம் பதிவு செய்து புகார் தெரிவித்தவர்களுக்கு அதற்குரிய பதிவு எண் தெரிவிப்பதுடன் புகார் செய்த அரைமணி நேரத்தில் பழுது தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்படும். பழுதுகள் தன்மையைப் பொறுத்து அதற்குரிய காலக்கட்டத்தில் சரிசெய்திடப்படும். சரிசெய்ய பின் மீண்டும் அதே கணினியை புகாருக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்ற பதிவும் மேற்கொள்ளப்படும். மறுபதிவு வரும்வரை அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும். இத்திட்டத்தால் பொதுமக்கள் தங்களது குறைகளை இருந்த இடத்திலிருந்தே எவ்விதக் கட்டணமின்றி தெரிவிக்க இயலும். அதனால் அவர்களுக்கு காலவிரையம் தவிர்க்கப்படும். இத்திட்டம் என்பது பொதுமக்களுக்கு மிகமிக அவசியமான ஒன்றாகும். எனவே இதுபோன்ற திட்டங்களை பொதுமக்கள் நல்லமுறையில் பயன்படுத்தி பயன்பெற்றிட வேண்டுமென மாண்புமிகு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் தெரிவித்தார்.
          இந்நிகழ்ச்சியில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.நாகராஜன், தமிழ்நாடு மின்பகிர்மான கழக மதுரை மண்டல தலைமைப் பொறியாளர் கோல்ட்வின் வில்லியம்ஸ், மேற்பார்வை பொறியாளர் சின்னையன், மின்திட்ட செயலாளர் ஜெயக்குமார், செயற்பொறியாளர்கள், முருகையன், வீரமணி, ஜான்சன், வெங்கட்ராமன், முத்தழகு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிஆர்.செந்தில்;நாதன், கூட்டுறவு விற்பனை பண்டகசாலை சங்கத்தலைவர் ஆனந்தன்,

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து