முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அம்மா முதலமைச்சராக இருந்த காலத்திலிருந்து இன்று வரை சாலை பராமரிப்பில் இந்தியாவிலேயே முதலிடம் வகிக்கும் மாநிலம் தமிழகம்தான் - சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்

ஞாயிற்றுக்கிழமை, 21 ஜூலை 2019      தமிழகம்
Image Unavailable

சேலம் : அம்மா முதல்வராக இருந்த காலத்திலிருந்து இன்று வரை சாலை பராமரிப்பில் இந்தியாவிலேயே முதலிடம் வகிக்கும் மாநிலம் தமிழகம்தான் என்று சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் தெரிவித்தார்.

சேலம், சங்ககிரி சட்டமன்றத் தொகுதி, தாரமங்கலம் புதிய புறவழிச் சாலை மற்றும் மேம்பாலங்களை திறந்து வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,

நீண்டகாலமாக தாரமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் இருக்கின்ற பொதுமக்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள், முன்னாள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் ஆகியோரின் ஒட்டுமொத்தக் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக தாரமங்கலம் புறவழிச் சாலையையும், இரண்டு பாலங்களையும் இன்று திறந்து வைக்கின்றேன். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு சாலை உள்கட்டமைப்பு என்பது மிகமுக்கியமான ஒன்றாகும். எந்தவொரு மாநிலத்தில் சாலை உள்கட்டமைப்பு சிறந்து விளங்குகின்றதோ அந்த மாநிலம் தொழில் வளம் நிறைந்த சிறந்த மாநிலமாக இருக்கும். எனவே, நம்முடைய தமிழ்நாடு சாலை மேம்பாட்டில் இந்தியாவிலேயே சிறந்து விளங்கியிருக்கின்றது. சிறந்த உள்கட்டமைப்பு உள்ள மாநிலம் என்று சொன்னால் அது தமிழ்நாடு என்று பெயர் சொல்கின்ற அளவிற்கு அம்மா முதலமைச்சராக இருந்த காலத்திலிருந்து இன்று வரை சாலைப் பராமரிப்பில் இந்தியாவிலேயே முதலிடம் வகிக்கின்ற மாநிலம் தமிழ்நாடுதான் என்பதை பெருமையோடு சொல்லிக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்புக் கோட்டத்தின் சார்பாக சங்ககிரி சட்டமன்றத்திற்கு உட்பட்ட தாரமங்கலத்தில் ரூபாய் 24 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் 3.110 கிலோ மீட்டர் நீளம் கொண்ட தாரமங்கலம் புதிய புறவழிச் சாலை மக்களின் ஆசியோடும், அம்மாவின் அருளாசியோடும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்தப் புறவழிச் சாலை ஓமலூர், சங்ககிரி, திருச்செங்கோடு, பரமத்தி சாலை கிலோமீட்டர் 9/240 பெரியபட்டியில் துவங்கி, கிலோ மீட்டர் 15/300 தொட்டம்பட்டியில் முடிவடைகின்றது. சேலம் நெடுஞ்சாலைத் துறையின் நபார்டு மற்றும் புறவழிச் சாலை கோட்டத்தின் சார்பில் கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றியம், கோணசமுத்திரம் ஊராட்சி, வடகரை வாய்க்கால் நரிமேடு சாலை ரூபாய் 2 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டிலும் மேச்சேரி ஊராட்சி ஒன்றியம், ஓலைப்பட்டி ஊராட்சி, தொலசம்பட்டி சாலை ரூபாய் 2 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூபாய் 5 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இரண்டு புதிய பாலங்களும் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமல்லாமல், ஓமலூரிலிருந்து மேட்டூர் வரைக்கும் உள்ள ரயில்வே கடவுகளின் இருபுறங்களிலும் ஏற்படும் அதிகமான போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக சட்டப்பேரவை உறுப்பினர்களும், பொதுமக்களும் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் தொலசம்பட்டியில் ரூபாய் 18.44 கோடியில் ரயில்வே மேம்பாலம், முத்தநாயக்கன்பட்டியில் ரூபாய் 15.94 கோடியில் ஒரு ரயில்வே மேம்பாலம், ஜே.எஸ்.டபுள்.யூ என்ற தொழிற்சாலைக்கு அருகிலே ரூபாய் 19.34 கோடி மதிப்பீட்டில் ஒரு உயர்மட்ட மேம்பாலம், புஞ்சாண்டியூரில் ரயில்வே கடவின் குறுக்கே ஒரு மேம்பாலமும் விரைந்து கட்டிக் கொடுத்து, மக்களுடைய பயன்பாட்டிற்கு வரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் மூலமாக,  திருச்செங்கோடு, சங்ககிரி, கொங்கணாபுரம், தாரமங்கலம், ஓமலூர் வரை நான்கு வழிச் சாலையாக விரிவுபடுத்தி போக்குவரத்து நெரிசலற்ற சாலையாக உருவாக்கித் தரப்படும். தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் வாயிலாக ஓமலூர் - மேச்சேரி சாலையில் ஓமலூர் முதல் மேச்சேரி வரை 14.6 கிலோ மீட்டர் நீளத்திற்கு 4 வழிச் சாலை அமைப்பதற்கு அம்மாவினுடைய அரசு திட்டமிட்டு அந்தப் பகுதியும் வளர்ச்சியடைவதற்கு விரிவுபடுத்தப்படும்.    பவானி-மேட்டூர், மேட்டூர் - தொப்பூர் பகுதிகளில் செல்கின்ற வாகனங்கள் தங்கு தடையின்றி செல்வதற்கு அம்மாவின் அரசு அந்த சாலைகளையும் விரிவுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளவிருக்கின்றது.

சாலை அமைக்கும் போது, நிலம் கையகப்படுத்துவதில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதால், மனமுவந்து நிலம் கொடுத்தால் தான் இது போன்ற சாலைகளை அமைத்து, விபத்து, விலைமதிக்க முடியாத உயிர்ச் சேதம், பயண நேரம் ஆகியவற்றை குறைக்க முடியும், எரிபொருளும் மிச்சப்படும். போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது தான் எங்களுடைய லட்சியம். அம்மா காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றோம். நான் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து இன்று வரை சேலம் மாவட்டம் மட்டுமல்லாமல், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு சாலைகளை சீரமைத்திருக்கின்றோம். இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து