அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முயற்சியால் கள்ளிக்குடி வட்டாட்சியர் அலுவலகம், திருமங்கலம் கோட்டாட்சியர் அலுவலகம் அமைத்திட இடம் தேர்வு:

ஞாயிற்றுக்கிழமை, 4 ஆகஸ்ட் 2019      மதுரை
4 rpu

திருமங்கலம்.-தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் பொதுமக்கள் வசதிக்காக புதிதாக கள்ளிக்குடி வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அமைத்திட இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக திருமங்கலம் தொகுதியில் பொதுமக்களின் வசதிக்கென புதிதாக கள்ளிக்குடி வருவாய் வட்டமும்,திருமங்கலம் வருவாய் கோட்டமும் அமைக்கப்பட்டு தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கள்ளிக்குடி வட்டாட்சியர் அலுவலகமும்,திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகமும் தற்காலிகமாக சிறிய அளவிலான அரசு கட்டிடங்களில் செயல்பட்டு வருகிறது.இந்த நிலையினை மாற்றி பொதுமக்களுக்கு இடையூறின்றி அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்கச் செய்திடும் வகையில் கள்ளிக்குடி வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் திருமங்கலம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் புதிதாக அமைத்திட இடத்தை தேர்வு செய்திடும் பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
இதனை தொடர்ந்து தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவுறுத்தலின் படி கள்ளிக்குடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கள்ளிக்குடியிலிருந்து குராயூர் சென்றிடும் சாலையில் ரயில்வே சுரங்கப்பாதையை தாண்டி சிறிது தூரத்தில் உள்ள விஸ்தாரமான அரசு இடமும், திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு கப்பலூர் அரசு கல்லூரி மற்றும் கால்நடை உதவி இயக்குனர் அலுவலகம் அருகேயுள்ள விஸ்தாரமான அரசு இடமும் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் தெரிவித்தார்.அதன்படி மேற்கண்ட அலுவலகங்களுக்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது தொடர்பான கருத்துரு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் மேற்கண்ட அரசு அலுவலக கட்டிடங்கள் கட்டுவதற்கான உத்தரவினை தமிழக அரசு பிறப்பித்திடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழக அரசின் இந்த சிறப்பான நடவடிக்கைகளால் திருமங்கலம் பகுதி மக்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து