கிராமங்களுக்கு நேரில் சென்று மனுக்களை பெற்று உடனடி தீர்வு: தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் - சேலத்தில் இன்று எடப்பாடி துவக்கி வைக்கிறார்

ஞாயிற்றுக்கிழமை, 18 ஆகஸ்ட் 2019      தமிழகம்
cm edapadi 2019 08 12

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் 110- விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தை சேலத்தில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைக்கிறார்.

தமிழகத்தில் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்கள் தோறும் அரசு அதிகாரிகள் நேரில் சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்று அங்கேயே தீர்வு காணும் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் துவக்கப்படும் என்று சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒவ்வொரு திங்கட்கிழமையும், ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் நடைபெறும் என்றும், இதில் விவசாயிகள், ஓய்வூதியதாரர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் தங்களது குறைகளுக்கு தீர்வு காண்பதற்காக இந்த முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் வழிவகை செய்யும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு அ.தி.மு.க. அரசில் ஏற்கனவே பல்வேறு குறைதீர்க்கும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அரசு எடுத்து வரும் இத்தகைய முயற்சிகளுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் நகரங்களில், வார்டு வாரியாக கிராமங்கள்தோறும் அரசு அதிகாரிகள் நேரடியாக சென்று மனுக்களை பெற்று தீர்வு காணும் இந்த திட்டத்தின் துவக்க விழா சேலம் மாவட்டத்தில் இன்று துவக்கப்படுகிறது. இந்த முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் துவக்க விழா இன்று 19-ம் தேதி காலை 9.30 மணியளவில் சேலம் மாவட்டம் நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியம் வனவாசி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் நடக்கிறது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு இந்த சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தினை துவக்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் முன்னிலை வகிக்கிறார். விழாவில் அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள். அரசு அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்களிடம் இருந்து நேரடியாக மனுக்களை பெற்று அங்கேயே அந்த மனுக்களுக்கு தீர்வு கண்டு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.

இன்று காலை 11 மணியளவில் எடப்பாடியில் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திலும், பிற்பகல் 2 மணியளவில் கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திலும் இந்த முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் நடைபெறுகிறது. இதன் பின்னர் நாளை 20-ம் தேதி காலை 9.30 மணிக்கு தலைவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திலும், 11 மணிக்கு ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திலும், பிற்பகல் 2.30 மணிக்கு வாழப்பாடியில் உள்ள சேலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்திலும் இந்த முதலமைச்சரின் குறைதீர்க்கும் திட்டம் நடக்கிறது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெறுகிறார். பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் அனைத்தும் கணினியில் பதிவு செய்யப்பட்டு உடனடி தீர்வு காண வழிவகை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து