முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எடப்பாடி பழனிசாமி தனது பெயரை மாற்றிக்கொள்ளலாம்: அமைச்சர் சேகர்பாபு

வெள்ளிக்கிழமை, 11 ஜூலை 2025      தமிழகம்
Sekarbabu-2023 04 06

Source: provided

சென்னை : எடப்பாடி பழனிசாமி தனது பெயரை 'பல்டி' பழனிசாமி என மாற்றிக்கொள்ளலாம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

கோவில் உண்டியலில் போடப்படும் பணத்திலிருந்து கல்லூரிகள் கட்டுவதற்கு எதற்காக செலவு செய்யவேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பழனிசாமி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, அறநிலையத்துறை நிதியில் இருந்து கல்லூரி ஆரம்பித்தால், மாணவர்களின் தேவைக்கான நிதி கிடைக்காது என்பதால் அந்த கருத்தை கூறியதாக விளக்கம் அளித்தார்.

இதுதொடர்பாக ராயபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், கோவில் பணத்தில் கல்லூரி கட்டுவது சதிச்செயல் என்று பேசிவிட்டு தற்போது மாற்றி பேசுவதா? எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது பெயரை 'பல்டி' பழனிசாமி என மாற்றிக்கொள்ளலாம்.

எடப்பாடி பழனிசாமி, தி.மு.க.வை மட்டுமல்ல அவரது கட்சி தலைவர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவையும் விமர்சிக்கிறார். கொள்ளிக்கட்டையை எடுத்து தலைமை சொறியும் வேலையில் எடப்பாடி பழனிசாமி இறங்கியுள்ளார் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து