முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் 9-ம் தேதி நடை திறப்பு

வெள்ளிக்கிழமை, 6 செப்டம்பர் 2019      ஆன்மிகம்
Image Unavailable

ஓணம் பண்டிகையை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகிற 9-ம் தேதி நடை திறக்கப்படுகிறது.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகிற 9-ம் தேதி மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், தந்திரி வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார். திருவோண தினமான 11-ம் தேதி சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அன்று மதியம் ஐயப்ப பக்தர்களுக்கு ஓண விருந்து வழங்கப்படுகிறது. தொடர்ந்து 13-ம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடக்கிறது. பின்னர் அன்று இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. மீண்டும் புரட்டாசி மாத பூஜைக்காக செப்டம்பர் 16-ம் தேதி மாலையில் நடை திறக்கப்படும். 21-ம் தேதி வரை வழக்கமான பூஜைகளுடன் படி பூஜை உட்பட சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் திருவனந்தபுரம் தலைமைச்செயலகத்தில் முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் நடப்பாண்டில் ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு செய்யப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில், தேவஸ்தான துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், தலைமை செயலாளர் டோம் ஜோஸ், போலீஸ் டி.ஜிபி. லோக்நாத் பெகரா மற்றும் பல்வேறு துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து