உ.பி. சட்டசபை இடைத்தேர்தல்: போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்தார்- சோனியா காந்தி

சனிக்கிழமை, 14 செப்டம்பர் 2019      இந்தியா
sonia 2019 05 27

லக்னோ : உத்தர பிரதேசத்தில் நடைபெறவுள்ள சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அறிவித்தார்.  

உத்தர பிரதேசம் மாநிலத்தில் காலியாக உள்ள 5 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் கட்சி  வெளியிட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தி ஒப்புதலின் பேரில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

அதன்படி, இக்லாஸ் தொகுதியில் உமேஷ் குமார் திவாகரும், துண்டியா தொகுதியில் ஸ்நே லதாவும், கோவிந்த் நகர் தொகுதியில் கரிஷ்மா தாக்கூரும், ஜலால்பூர் தொகுதியில் சுனில் மிஷ்ராவும், கோசி தொகுதியில் ராஜ்மங்கள் யாதவும் போட்டியிடுகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து