ஓய்வு பெறும் முடிவை டோனியிடமே விட்டு விடுங்கள்: தவான் சொல்கிறார்

சனிக்கிழமை, 28 செப்டம்பர் 2019      விளையாட்டு
Dhawan 2019 09 28 0

புது டெல்லி : எம்.எஸ்.டோனி பல முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளார். அவர் ஓய்வு முடிவை அவரிடமே விட்டு விடுங்கள் என்று ஷிகர் தவான் கூறி உள்ளார்.

தனியார் டி.வி. ஒன்றின் ஆப் கி அதாலத் நிகழ்ச்சியில் தொடக்க வீரர் ஷிகர் தவான் கூறியதாவது;-

டோனி இவ்வளவு காலமாக விளையாடி வருகிறார். அவர் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பது அவருக்குப் புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன். அது அவரது முடிவாக இருக்க வேண்டும். அவர் தனது வாழ்க்கையில் இந்தியாவுக்காக இதுவரை மிக முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளார். நேரம் வரும் போது அவர் அது குறித்து அறிவிப்பார் என்று நான் நம்புகிறேன். ஒவ்வொரு வீரரின் திறனையும் மேம்படுத்துவதில் டோனியை விட சிறந்தவர்கள் யாரும் இல்லை. அது ஒரு பெரிய தலைவரின் தரம். ஒவ்வொரு வீரரின் திறனையும் அவர் அறிவார். மேலும் ஒரு வீரருக்கு எந்த அளவிற்கு ஆதரவளிக்க வேண்டும் என்பதையும் அவர் நன்கு அறிந்து உள்ளார். அவர் கேப்டனாக பதவி வகித்த காலத்தில் இந்தியா பெற்ற வெற்றி இதை காட்டுகிறது. அவரது கட்டுப்பாடு அவரது மிகப்பெரிய பலம் ஆகும்.

கேப்டன் விராட் கோலி உட்பட தற்போதைய அணியின் உறுப்பினர்கள் டோனி மீது மிகுந்த மரியாதை செலுத்துகின்றனர். நாங்கள் அனைவரும் அவருக்கு மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். நாங்கள் அவரை மிகவும் மதிக்கிறோம். விராட் கோலி இளமை பருவத்தில் அவரை டோனி வழிநடத்தினார். அவர் கேப்டனாக ஆனபோது அவருக்கு டோனி உதவினார். இது ஒரு தலைவரின் குணம். விராட் கோலி இப்போது அவருக்கு நன்றியைக் காட்டுகிறார். ரிஷப் பண்ட் மிகவும் திறமையானவர், அவர் இந்தியாவுக்காக நீண்ட காலம் விளையாடுவார் என்று நான் நம்புகிறேன். அவர் கடுமையாக முயற்சி செய்கிறார் என்று கூறினார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து