முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சகாவிற்கு ‘ட்ரீட்’ வைக்க கடமை பட்டிருக்கிறேன்: உமேஷ் யாதவ்

திங்கட்கிழமை, 14 அக்டோபர் 2019      விளையாட்டு
Image Unavailable

இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் புனேயில் நடைபெற்றது. இதில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா தொடரை 2-0 எனக் கைப்பற்றியது.

விராட் கோலியின் இரட்டை சதம், மயங்க் அகர்வாலின் சதம், இந்தியாவின் அபார வெற்றி ஆகியவற்றுடன் சகாவின் உலகத்தரம் வாய்ந்த விக்கெட் கீப்பிங் பணியும் சிறப்பாக பேசப்பட்டது.இரண்டு இன்னிங்சிலும் மூன்று கேட்ச்களை அபாரமாக பிடித்தார். முதல் இன்னிங்சில் ப்ரூயின் அடித்த பந்து முதல் ஸ்லிப்பையும் தாண்டி சென்றது. அதை அபாரமாக பாய்ந்து பிடித்தார். 2-வது இன்னிங்சில் ப்ரூயின் லெக் சைடில் அடித்த பந்தை இடது கையால் அபாரமாக பாய்ந்து பிடித்தார். அதன்பின் பிலாண்டர் அடித்த பந்தையும் சிறப்பாக பிடித்தார். மூன்று முறையும் பந்து வீசியவர் உமேஷ் யாதவ். அபாரமான கேட்ச்களை பிடித்த அவருக்கு ‘ட்ரீட்’ வைக்க கடமை பட்டிருக்கிறேன் என்று உமேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து உமேஷ் யாதவ் கூறுகையில் ‘‘லெக் சைடு சென்ற பந்துகளை அபாரமாக டைவ் அடித்து ஸ்டன்னிங் கேட்ச் பிடித்த சகாவிற்கு நான் கண்டிப்பாக ‘ட்ரீட்’ வைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். கடைசி இரண்டு விக்கெட்டும் சகாவின் விக்கெட்டுக்கள்தான். பந்தை லெக் ஸ்டம்பிற்கு வெளியில் வீசும்போது, அது பவுண்டரியாகத்தான் இருக்கும் என்று நீங்கள் உறுதியாக நினைக்கலாம். ஆனால், அது கேட்ச்-யாக மாற சற்று வாய்ப்புள்ளது. வாய்ப்பு கிடைத்தால் சரியாக பயன்படுத்தி சகா கேட்ச் பிடித்து விடுவார் என்பது எங்களுக்குத் தெரியும்’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து