Idhayam Matrimony

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: ஆஸ்திரேலியாவிற்கு 2-வது இடம்

திங்கட்கிழமை, 2 டிசம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

சிட்னி : பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2 - 0 எனக் கைப்பற்றி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் ஆஸ்திரேலியா உயர்ந்துள்ளது.

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆஷஸ் தொடரின்போது அறிமுகம் செய்யப்பட்டது. இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் வெற்றி பெற்றால், ஒரு டெஸ்டிற்கு தலா 60 புள்ளிகள் வழங்கப்படும். 3, 4 மற்றும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கு புள்ளிகள் குறைத்து வழங்கப்படும். ஆஸ்திரேலியா ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் இரண்டில் வெற்றி பெற்றது. இரண்டில் தோல்வியடைந்தது. ஒரு ஆட்டம் டிராவில் முடிந்தது.ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் 24 புள்ளிகள், டிரா ஆனால் 8 புள்ளிகள் கிடைக்கும். அதன்படி ஆஸ்திரேலியாவுக்கு 56 புள்ளிகள் கிடைத்தது. இதற்கிடையே இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் (2), தென்ஆப்பிரிக்கா (3), வங்காளதேசம் (2) அணிகளுக்கெதிராக அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்று 360 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது.

இந்நிலையில்தான் ஆஸ்திரேலியா சொந்த மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இரண்டிலும் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியாவுக்கு 120 புள்ளிகள் கிடைத்தன. இதன்மூலம் ஆஸ்திரேலியா 7 போட்டிகளில் 4 -ல் வெற்றி, 2-ல் தோல்வி, ஒன்றில் டிரா மூலம் 176 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது. நியூசிலாந்து இலங்கைக்கு எதிராக ஒரு போட்டியில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 60 புள்ளிகள் பெற்றுள்ளது. தற்போது இங்கிலாந்துக்கு எதிராக முதல் டெஸ்டில் வெற்றி பெற்று 60 புள்ளிகள் பெற்றுள்ளது. 2-வது போட்டி டிராவில் முடிந்தால் 20 புள்ளிகள் கிடைக்கும். அப்போது நியூசிலாந்து 140 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் நீடிக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து