முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2019-ம் ஆண்டிற்கான சிறந்த நபர் கிரேட்டா தன்பர்க் டைம் பத்திரிகை தேர்வு

வியாழக்கிழமை, 12 டிசம்பர் 2019      உலகம்
Image Unavailable

லண்டன் : சுவீடனைச் சேர்ந்த 16 வயது சிறுமி கிரேட்டா தன்பர்க். சுற்றுச்சூழல் மீது மிகுந்த அக்கறை கொண்ட இவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம், உலக வெப்பமயமாதலை தடுக்க வலியுறுத்தி பாராளுமன்ற வளாகம் முன்பு தனி ஒரு ஆளாக போராட்டம் நடத்தினார். இதன் மூலம் பிரபலமான அவர் இளம் சுற்றுச்சூழல் ஆர்வலராக அறியப்பட்டார். கடந்த செப்டம்பர் மாதம், நியூயார்க்கில் நடந்த ஐ.நா. வின் பருவநிலை மாற்றத்திற்கான மாநாட்டில், தேசிய அளவிலான அரசியல் தலைவர்களை குற்றம் சாட்டி பேசினார். பருவநிலை மாற்றம் தொடர்பான போராட்டங்களில் முன்னிலை வகித்து போராடிய சுவீடன் நாட்டு பள்ளி மாணவியான கிரேட்டா தன்பெர்க் 2019-ம் ஆண்டிற்கான சிறந்த நபராக டைம் பத்திரிகையால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த ஆண்டு கிரகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினையின் வலிமையான குரலாக கிரேட்டா மாறினார், உலகளாவிய அளவில் பருவநிலை மாற்றத்திற்கான இயக்கத்தை அவர் வழி நடத்துகிறார் என்று டைம் பத்திரிக்கையின் இந்த பரிந்துரையை அறிவித்த அதன் தலைமை ஆசிரியர் எட்வர்ட் பெல்செந்தல் தெரிவித்தார். 1927-ம் ஆண்டில் இருந்து டைம் பத்திரிக்கையின் வரலாற்றில் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களில் 16 வயதுடைய கிரேட்டா தன்பெர்க் தான் மிகவும் இளையவர்.டைம் பத்திரிகையின் இந்த கவுரவத்தை பிரைடேஸ் பார் பியூச்சர் என்ற இயக்கத்தினருடனும் பருவநிலை மாற்றத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் செயல்பாட்டாளர்களுடனும் பகிர்ந்து கொள்வதாக கிரேட்டா தன்பெர்க் அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அமெரிக்க அதிபர் டிரம்பிடம் பருவநிலை மாற்றம் தொடர்பாக அறிவியல் பூர்வமான கேள்விகளை எழுப்பியுள்ளார் கிரேட்டா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து