திடீர் நெஞ்சுவலி: மருத்துவமனையில் சித்தராமையாவுக்கு இருதய சிகிச்சை

வியாழக்கிழமை, 12 டிசம்பர் 2019      இந்தியா
Siddaramaiah 2019 09 10

பெங்களூரு : கர்நாடக முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான சித்தராமையாவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான சித்தராமையா கர்நாடகத்தில் நடந்த 15 தொகுதி இடைத்தேர்தலுக்காக கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டார். நேற்று முன்தினம் காலை 6.30 மணியளவில் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து பெங்களூரு பசவேஸ்வரா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதிக ரத்த அழுத்தம் மற்றும் உடல் பரிசோதனை நடைபெற்றது. முதலுதவி அளிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்பட்ட சித்தராமையாவுக்கு அடுத்தடுத்து இதயத்தில் வலி ஏற்பட்டது. இதையடுத்து மல்லேஸ்வரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் உடல்நலம் தேறி வருவதாக அவரது மகன் தெரிவித்துள்ளார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து