ஹோபார்ட் டென்னிஸ்: இரட்டையர் இறுதிச் சுற்றுக்கு சானியா மிர்சா ஜோடி தகுதி

வெள்ளிக்கிழமை, 17 ஜனவரி 2020      விளையாட்டு
SPORTS-5 2020 01 17

Source: provided

இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா மற்றும் அவரது உக்ரேனியக் கூட்டாளி நாடியா கிஷேனக் ஹோபார்ட் இன்டர்னேஷனல் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றனர்.

அரையிறுதியில் ஸ்லாவேனிய - செக்.குடியரசு ஜோடியான தமரா ஜிடான்சேக் மற்ரும் மேரி பூஸ்கோவா ஜோடியை நேர் செட்களில் வீழ்த்தி சானியா மோடி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 5-ம் தரவரிசையில் உள்ள சானியா - நாடியா ஜோடி 7-6, 6-2 என்ற நேர் செட்களில் அபார வெற்றி பெற்றது. சர்வதேச டென்னிசுக்கு சானியா மிர்சா சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு வந்து எடுத்த எடுப்பிலேயே இரட்டையர் இறுதி வரை முன்னேறியுள்ளது பலரது பாராட்டுகளையும் ஈர்த்துள்ளது.

சானியா மிர்சாவின் தற்போதைய வயது 33. ஏப்ரல் 2018-ல் மகன் இஷான் பிறப்புக்காக டென்னிஸிலிருந்து விலகினார். இவரது கணவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து