முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரமிடு மீது ஏறியதால் சிறைவாசம் அனுபவித்த யூ.டியூப். பிரபலம்

செவ்வாய்க்கிழமை, 21 ஜனவரி 2020      உலகம்
Image Unavailable

மாஸ்கோ : உலக அதிசயமான எகிப்து பிரமிடு மீது ஏறிய காரணத்தினால் ஐந்து நாட்கள் சிறை தண்டனை அனுபவித்ததாக ரஷ்ய யூ.டியூப் பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவைச் சேர்ந்தவர் விட்டலி ஸ்டோரோவெட்ஸ்கி. இவர் தனது குறும்புத்தனமான செயல்களாலும் சாகச நிகழ்வுகளாலும் சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர். யூ. டியூப் வலைத்தளத்தில் ஒரு சேனலும் நடத்தி வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விட்டலியை 3 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர். எகிப்து நாட்டில் உள்ள கிசா பிரமிடுகள் வளாகத்தில் உள்ள ஒரு பிரமிடின் உச்சி மீது தான் நிற்கும் ஒரு புகைப்படத்தை விட்டலி சமீபத்தில் பதிவிட்டார். அந்த புகைப்படத்தின் அடிக்குறிப்பில்,

கடந்த ஐந்து நாட்களில் நான் என்ன செய்தேன் என்பதை எந்த வார்த்தைகளாலும் விளக்க முடியாது. நான் பலமுறை சிறையில் இருந்துள்ளேன். ஆனால் இந்த 5 நாட்கள் எகிப்து சிறையில் இருந்தது மிகவும் மோசமானது. நான் பயங்கரமான விஷயங்களை கண்டேன், இதே போல் யாரும் செய்வதை நான் விரும்பவில்லை என பதிவிட்டிருந்தார். அதன் பிறகு அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,

எகிப்து தேசத்தை நான் விரும்புகிறேன். எகிப்து தேசத்தை அவமதிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. ஆஸ்திரேலிய காட்டுத்தீயினால் கோடிக்கணக்கான உயிரினங்கள் அழிந்துள்ளன. இந்த காட்டுத்தீ மற்றும் உலக நாடுகளிடையேயான போர் ஆகியவற்றைப்பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவே விரும்புகிறேன். போரை நிறுத்துங்கள், ஆஸ்திரேலிய காட்டுத்தீ பிரச்சினைக்கு நன்கொடை வழங்குங்கள். கீழே எனக்காக ராணுவமே காத்திருக்கிறது என அவர் கூறுவது போல் உள்ளது.

சுமார் 7 லட்சம் பேரால் பார்க்கப்பட்டுள்ள இந்த வீடியோவுக்கு நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் விமர்சனங்கள் குவிந்தன. நீங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்துவது சரியான விஷயம் என்றாலும், பிரமிடு மீது ஏறுவது சரியல்ல. அந்த நாட்டின் விதிகளை மதிக்க வேண்டும் என இணையவாசி ஒருவர் கமெண்ட் செய்திருந்தார். விட்டலி பிரமிடை விட்டு கீழிறங்கியதும் காவல்துறையினரால் கொண்டு செல்லப்பட்டார். கிசா பிரமிட் வளாகம் ஒரு யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாகும், இது தி கிரேட் பிரமிட் மற்றும் பண்டைய எகிப்தில் கட்டப்பட்ட மிகப்பெரிய பிரமிடுகளான காப்ரே பிரமிடு ஆகியவற்றின் தாயகமாகும். பிரமிடுகள் உலகின் பண்டைய ஏழு அதிசயங்களில் ஒன்றாகும். அவைகளில் ஏறுவது சட்டவிரோதமானது என  இச்சம்பவம் குறித்து எகிப்து அதிகாரிகள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து