மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும் முகாம்

புதன்கிழமை, 22 ஜனவரி 2020      சிவகங்கை
22  smart card

மானாமதுரை,- சிவகங்கை மாவட்டம்,மானாமதுரை ஊராட்சி  ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும் முகாம் நடைபெற்றது.மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கு வீல்சேர்  வழங்கப்பட்டது. இந்த முகாமில் மானாமதுரையைச் சேர்ந்த ஏராளமான மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர்.மேலும் இம்முகாமில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணகுமார்,
 தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க தலைவர் இன்னாசி ராஜா, மாவட்ட செயலாளர் முத்துராமலிங்க பூபதி மாவட்ட துணைச் செயலாளர் திருநாவுக்கரசு,மாவட்ட துணைத்தலைவர் மலர்விழி மாவட்ட பொருளாளர் மனோகரன் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து