முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரோனா வைரஸை சமாளிக்க எல்லா வளங்களும் எங்களிடம் உள்ளன: சீனா

செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2020      உலகம்
Image Unavailable

பெய்ஜிங் : கரோனா வைரஸை சமாளிக்க எல்லா வளங்களும் சீனாவிடம் உள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ தெரிவித்துள்ளார்.

சீனாவில் சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வூஹானில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மக் காய்ச்சல் காரணமாக இருவர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டபோது, அவர்களுக்கு ‘கரோனா' வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது. கரோனா வைரஸ் சீனாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் வைரஸ் காரணமாக பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது சீனாவில் கரோனா வைரஸ் காரணமாக பலியானவர்கள் எண்ணிக்கை 106 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 4,515 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் பாதிக்கபட்டுள்ளனர் என சீன சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கரோனா வைரஸ் தொடர்பாக நடந்த கூட்டத்தில் சின வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வாங் யீ கூறும்போது, கரோனா வைரஸை எதிர்கொள்ள அனைத்து வளங்களும் சீனாவிடம் உள்ளது என்றார். கரோனா வைரஸ் பரவலை முன்னிட்டு சீனாவில் பள்ளிகளில் தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து