முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒருநாள் போட்டியில் அதிகபட்ச ஸ்கோரை சேஸிங் செய்த அணி : இந்திய மகளிர் அணி சாதனை

வெள்ளிக்கிழமை, 31 அக்டோபர் 2025      விளையாட்டு
INDIA 2025-10-31

Source: provided

மும்பை : ஒருநாள் போட்டிகளில் இதுவரையிலான அதிகபட்சமாக துரத்திப் பிடிக்கப்பட்ட இலக்காக இருந்தது. தற்போது 339 ரன்கள் இலக்கை எட்டிப்பிடித்து ஆஸ்திரேலிய அணியின் சாதனையை முறியடித்து இந்திய அணி சேஸிங்கில் புதிய வரலாறு படைத்துள்ளது.

ஆஸ்., பேட்டிங்...

ஐ.சி.சி. மகளிர் ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரில் நவி மும்பையில் (அக்டோபர் 30) நடைபெற்ற 2-வது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 49.5 ஓவர்களில் 338 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிரடியாக விளையாடிய ஃபோப் லிட்ச்ஃபீல்டு சதம் விளாசி அசத்தினார். அவர் 93 பந்துகளில் 119 ரன்கள் எடுத்தார்.

ஸ்ரீ சரணி - தீப்தி...

அதில் 17 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, எல்லிஸ் பெரி 77 ரன்களும் (6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்), ஆஷ்லே கார்டன்ர் 63 ரன்களும் (4 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்) எடுத்தனர். பெத் மூனி 24 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் ஸ்ரீ சரணி மற்றும் தீப்தி சர்மா தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். கிராந்தி கௌத், அமன்ஜோத் கௌர் மற்றும் ராதா யாதவ் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

339 ரன்கள் இலக்கு...

பின்னர், 339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 48.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 341 ரன்கள் எடுத்து அபார வெற்றிபெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் 127* (14 பவுண்டரிகள்) ரன்களும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் 89 ரன்களும்(10 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்), ரிச்சா கோஷ் 26 ரன்களும், தீப்தி 24 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணித் தரப்பில் கிம் கார்த், சதர்லாண்ட் இருவரும் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

அதிகபட்ச ஸ்கோர்...

லீக் சுற்றில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 331 ரன்கள் என்ற இலக்கை ஆஸ்திரேலிய அணி விரட்டிப் பிடித்திருந்ததே ஒருநாள் போட்டிகளில் இதுவரையிலான அதிகபட்சமாக துரத்திப் பிடிக்கப்பட்ட இலக்காக இருந்தது. தற்போது 339 ரன்கள் இலக்கை எட்டிப்பிடித்து ஆஸ்திரேலிய அணியின் சாதனையை முறியடித்து இந்திய அணி சேஸிங்கில் புதிய வரலாறு படைத்துள்ளது. இந்திய அணி வருகிற ஞாயிற்றுக்கிழமை(நவ.2) மும்பையில் நடைபெறும் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்ளவிருக்கிறது.

நாக் அவுட் போட்டிகளில்.... 

ஐ.சி.சி. உலக கோப்பை வரலாற்றில், நாக் அவுட் போட்டிகளில் முதல் முறையாக 300+ ரன்களை சேஸிங் செய்த அணி என்ற புதிய சாதனையை இந்திய மகளிர் அணி படைத்துள்ளது. இதற்கு முன்பு கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற உலககோப்பை அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 298 ரன்களை நியூசிலாந்து ஆண்கள் சேஸிங் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 

BOX - 2

ஜாம்பவான்கள் புகழாரம்

இந்திய மகளிரணிக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின் டெண்டுல்கர், ``இந்திய அணியை முன்னின்று வழிநடத்திய ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌருக்கும், விளையாட்டை உயிர்ப்புடன் வைத்திருந்த ஸ்ரீ சரணி மற்றும் தீப்தி சர்மாவுக்கும் வாழ்த்துகள். இந்திய அணியை மென்மேலும் வெற்றிபெறச் செய்யவும்’’ என்று பதிவிட்டுள்ளார்.

விராட் கோலியின் எக்ஸ் பக்கத்தில், ``ஆஸ்திரேலியா போன்ற ஒரு வலிமையான எதிரணியை நமது அணி வென்றது - எவ்வளவு பெரிய வெற்றி. பெண்களின் சிறந்த ஆட்டம், ஜெமிமாவின் தனித்துவமான செயல்திறன். இந்த ஆட்டமானது, மனவலிமை, நம்பிக்கை மற்றும் ஆர்வத்தின் வெளிப்பாடு. இந்திய அணிக்கு வாழ்த்துகள்’’ என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து