தங்கம் விலை சவரனுக்கு ரூ.296 குறைந்தது

புதன்கிழமை, 29 ஜனவரி 2020      வர்த்தகம்
gold 2020 01 29

தங்கம் விலை நேற்று சவரனுக்கு 296 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் 3838 ரூபாய்க்கும், ஒரு சவரன் 30 ஆயிரத்து 704 ரூபாய்க்கும் விற்பனையானது.

சென்னையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ. 296 குறைந்தது. நேற்று முன்தினம் மாலை ஒரு கிராம் ரூ.3875, ஒரு பவுன் ரூ.31 ஆயிரத்துக்கு விற்பனை ஆன நிலையில் நேற்று கிராமுக்கு ரூ.37 குறைந்து ஒரு கிராம் ரூ.3838-க்கும் சவரனுக்கு ரூ.296 குறைந்து ரூ.30,704-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 2 குறைந்து ஒரு கிராம் ரூ.49-க்கும், கிலோவுக்கு ரூ.2 ஆயிரம் குறைந்து ரூ.49 ஆயிரத்துக்கும் விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து