கொரோனா பாதிப்பு: தஞ்சை பெரிய கோவில் 31-ம் தேதி வரை மூடல்

புதன்கிழமை, 18 மார்ச் 2020      ஆன்மிகம்
thanjavur-Big-temple 2020 03 18

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் சுகாதார அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. கொரோனாவை எதிர்கொள்ள முடியாமல் மனித சமுதாயம் திணறி வருகிறது. இந்நிலையில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், தஞ்சாவூர் பெரிய கோவிலை மார்ச் 31-ம் தேதி வரை மூட மத்திய தொல்லியல்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி தஞ்சை பெரிய கோவில் மூடப்பட்டது.

முன்னதாக,மார்ச்  31-ம் தேதி வரை தஞ்சை பெரியகோயிலில் பக்தர்களுக்கு அனுமதியில்லை என மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் அறிவித்த நிலையில், தஞ்சை பெரியகோயிலை மூட மத்திய தொல்லியல்துறை உத்தரவிட்டுள்ளது.

திருச்சி ஸ்ரீரங்கம், மதுரை மீனாட்சியம்மன், வடபழனி முருகன் கோயில், கபாலீஸ்வரர் கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்களில்  தெர்மல் ஸ்கேனர் பரிசோதனைக்கு பிறகே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு 99 சதவீதம் உடல் நிலை வெப்பம் இருக்கும் பட்சத்தில் அவர்களை கோயில்களுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. கோயில்களுக்கு வரும் பக்தர்களின் நலன் கருதி 30 நிமிடங்களுக்கு ஒரு முறை கருவறை, சன்னதி மற்றும் கோயில் வளாகங்களில் கிருமி நாசினி மருந்து தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கமிஷனர் பணீந்திர ரெட்டி அனைத்து கோயில் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி அனைத்து கோயில்களிலும் 30 நிமிடங்களுக்கு ஒருமுறை கோயில் ஊழியர்கள் சார்பில் மருந்து தெளிக்கும் பணி நடந்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து