முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோமாலியா நாட்டில் ராணுவம் நடத்திய தாக்குதலில் தீவிரவாதிகள் 12 பேர் பலி

வெள்ளிக்கிழமை, 27 மார்ச் 2020      உலகம்
Image Unavailable

சோமாலியாவில் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் அல் ஷபாப் பயங்கரவாதிகள் 12 பேர் கொல்லப்பட்டனர்

சோமாலியா நாட்டில் அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்களாக இயங்கிவரும் அல் ஷபாப் பயங்கரவாதிகள், இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை ஏற்படுத்தும் நோக்கத்தில் அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டின் சில பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் இந்த பயங்கரவாத குழுக்கள் பொதுமக்கள், பாதுகாப்பு படையினரை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இவர்களை ஒழிக்கும் நடவடிக்கையில் சோமாலிய பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அந்நாட்டின் பெய் மாகாணத்தில் உள்ள ராணுவத்தளத்தை குறிவைத்து அல் ஷபாப் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு ராணுவம் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. இரு தரப்பினருக்கும் இடையே நடந்த இந்த மோதல் சம்பவத்தில் அல் ஷபாப் பயங்கரவாதிகள் 12 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 10 பயங்கரவாதிகள் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் ராணுவம் தரப்பில் எந்த உயிரிழப்புகளும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 1 week 6 days ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 days ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 5 days ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 6 days ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து