முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தி கொண்டால் ரூ. 2,000 ஊக்கத் தொகை : ஒடிசா அரசு அறிமுகம்

செவ்வாய்க்கிழமை, 30 ஜூன் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புவனேஸ்வர் : அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில் 10 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வோருக்கு ரூ. 2 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படுவதாக ஒடிசா அரசு அறிவித்துள்ளது. 

இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநிலஅரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

ஒரு மாநிலத்திலிருந்து வேறு மாநிலம் செல்வோர் இ-பாஸ் வைத்திருக்க வேண்டும்; தங்களை குறிப்பிட்ட நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகள் அமலில் உள்ளன.

இதனிடையே, அரசு மருத்துவமனைகளில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள பெரும்பாலான மக்கள் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. மேலும், தங்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.  

இதற்கு தீர்வு காணும் வகையில், ஒடிசா அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில் 10 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வோருக்கு ரூ. 2 ஆயிரம் ஊக்கத்தொகை மாநில அரசு சார்பில் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதாக ஒடிசா சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இத்திட்டத்தின் மூலம் ஊக்கத்தொகையாக இதுவரை ரூ.58.4 கோடி வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து