முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா பரிசோதனைகளை உ.பி.யில் அதிகரிக்க வேண்டும் : முதல்வர்யோகி ஆதித்யநாத்திடம் அமித்ஷா வலியுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 3 ஜூலை 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : உத்தர பிரதேச மாநிலத்தில் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்கும்படி முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறி உள்ளார்.

டெல்லி மற்றும் அதனை சுற்றி உள்ள அரியானா, உத்தர பிரதேச பகுதிகளை உள்ளடக்கிய தேசிய தலைநகர பிராந்தியத்தில் கொரோனா பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். அப்போது அதிக பரிசோதனைகளை செய்து, பாதிக்கப்பட்டவர்களை முன்கூட்டியே மருத்துவமனைகளில் சேர்த்து உயிரிழப்பு விகிதங்களை குறைக்க வேண்டும் என வலியுறுத்தினார். 

குறிப்பாக, உ.பி.யில் குறைந்த அளவில் பரிசோதனை செய்யப்படுவது குறித்து பலரும் கேள்வி எழுப்புவதால், முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் பரிசோதனைகளை அதிகரிக்கும்படி அமித்ஷா கூறியுள்ளார்.

இந்த மூன்று மாநிலங்களில் உத்தர பிரதேசத்தில்தான் குறைந்த அளவிலான பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. கவுதம் புத்தா நகர் மாவட்டத்தில் 10 லட்சம் பேரில் 72 பேருக்கும், காசியாபாத்தில் 78 பேருக்கு மட்டும் ஏன் பரிசோதனை நடத்தப்படுகிறது? என இக்கூட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

டெல்லியில் 10 லட்சம் பேரில் 679 பேருக்கும், குர்கானில் 482 பேருக்கும் பரிசோதனை நடத்தப்படுகிறது.  ரிக்சா ஓட்டுநர்கள், காய்கறி வியாபாரிகள் என அதிகம் பாதிக்கக்கூடிய வாய்ப்பு உள்ள நபர்களுக்கு பரிசோதனையை விரைவுபடுத்தும்படி ஏற்கெனவே அறிவுறுத்தியிருப்பதாக யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து