முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜூலை மாதம் நடைபெற இருந்த சி.ஏ. தேர்வு ரத்து: ஐ.சி.ஏ.ஐ. அறிவிப்பு

சனிக்கிழமை, 4 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சி.ஏ. தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.ஏ.ஐ. அறிவித்துள்ளது. 

இந்திய முழுவதும் கொரோனா அதிக அளவில் பரவி வருவதால் அனைத்து விதமான தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு வருகிறது. சில முக்கியம் வாய்ந்த தேர்வுகள் மட்டும் ரத்து செய்யாமல் ஒத்திவைக்கப்படுகிறது. தேர்வுகளை ரத்து செய்வதோ அல்லது ஒத்திவைப்பதோ அந்த அந்த மாநில அரசுகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் கையில் உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் பலவிதமான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டும், ரத்து செய்தும் உள்ளது. மேலும் ஆண்டு தோறும் இருமுறை சி.ஏ. தேர்வை இந்தியப் பட்டயக் கணக்காளர்களுக்கான நிறுவனம் நடத்தி வருகிறது. இந்த ஆண்டு மே மாதம் நடைபெற இருந்த தேர்வு கொரோனா ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அதனையடுத்து இந்த தேர்வு ஜூலை 29-ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஜூலை இறுதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், தேர்வை ரத்து செய்வதாக ஐ.சி.ஏ.ஐ. அறிவித்துள்ளது.

சி.ஏ. தேர்வு எழுத இந்திய முழுவதும் உள்ள மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் நவம்பர் மாதம் நடைபெறும் தேர்வுடன் சேர்த்து எழுதிக் கொள்ளலாம் என ஐ.சி.ஏ.ஐ. கூறியுள்ளது. மேலும் இந்த தேர்வு தொடர்பான கூடுதல் விவரங்களைத் மாணவர்கள் www.icai.org என்கிற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து