Idhayam Matrimony

நவம்பர் 10-ம் தேதிக்கு ஐ.பி.எல். 2020 இறுதிப் போட்டி தள்ளிப்போக வாய்ப்பு

வியாழக்கிழமை, 30 ஜூலை 2020      விளையாட்டு
Image Unavailable

ஐ.பி.எல். 2020 தொடரின் இறுதிப் போட்டி நவம்பர் 8-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 10-ம் தேதிக்கும் தள்ளிப்போக வாய்ப்புள்ளது.

இந்தியாவில் மார்ச் - ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெற இருந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி கொரோனா வைரஸ் தொற்றால் ஒத்திவைக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டதால் செப்டம்பர் 19-ம் தேதி முதல் நவம்பர் 8-ம்  தேதி வரை நடைபெறும் என ஐ.பி.எல். சேர்மன் பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்திருந்தார். அணி நிர்வாகம், பங்குதாரர்கள், ஒளிபரபப்பு நிறுவனம் ஆகியவை கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஐ.பி.எல். நிர்வாகம் அக்டோபர் மாதம் 26-ம் தேதியில் தொடங்க இருந்த ஐ.பி.எல். போட்டியை 19-ல் இருந்து நவம்பர் 8-ம் தேதி வரை நடத்த திட்டமிட்டிருந்தது.  ஆனால் ஒளிபரப்பு நிறுவனமான ஸ்டார் தீபாவளி நவம்பர் 14-ம் தேதி (சனிக்கிழமை) வருவதால் பண்டிகை வாரத்தை சரியான வகையில் பயன்படுத்திக் கொள்ள விரும்பியது. இதனால் தீபாவளிக்கு முந்தைய சில தினங்களுக்கு முன்பு வரை போட்டியை நடத்த வலியுறுத்தியது.  நவம்பர் 8-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை. எப்போதும் ஞாயிற்றுக்கிழமைதான் ஐ.பி.எல். இறுதிப் போட்டி நடைபெறும். தற்போது ஸ்டார் நிறுவனம் கேட்டுக் கொண்டதன்படி ஐ.பி.எல். போட்டியை இரண்டு நாட்கள் நீட்டிக்க ஐ.பி.எல். நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதனால் நவம்பர் 10-ம் தேதி செவ்வாய்க்கிழமை இறுதிப் போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 10-ம் தேதி அதிகாரப்பூர்வமாக இறுதிப் போட்டி நடைபெறும் என்றால் முதன்முறையாக  ஞாயிற்றிக்கிழமை அல்லாத தினத்தில் ஐ.பி.எல். இறுதிப் போட்டி நடைபெறும்.  ஆகஸ்ட் 2-ம் தேதி நடைபெறும் ஐ.பி.எல். ஆட்சி மன்றக்குழுவில் இறுதி முடிவு எடுக்கப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து