முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எந்த மொழியையும் திணிக்க மாட்டோம் : மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் உறுதி

ஞாயிற்றுக்கிழமை, 2 ஆகஸ்ட் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : எந்தவொரு மாநிலத்தின் மீதும் மத்திய அரசு எந்த மொழியையும் திணிக்காது என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். 

2019-ம் ஆண்டு புதிய கல்விக் கொள்கை வரைவை இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு மத்திய அமைச்சரிடம் வழங்கியது. மத்திய அரசு புதிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்நிலையில் தேசம் வெல்ல தேசிய கல்விக்கொள்கை என்ற பிரதமர் நரேந்திர மோடியின் உரையை முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சுட்டுரையில் பகிர்ந்திருந்தார்.

அதனை மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் சுட்டுரையில் மறுபதிவு செய்துள்ளார். அதில், தேசிய கல்விக் கொள்கை (NEP)-ஐ நடைமுறைப்படுத்துவதற்கான உங்கள் வழிகாட்டலை எதிர்பார்க்கிறோம்.

மத்திய அரசு, எந்தவொரு மாநிலத்தின் மீதும் எந்த மொழியையும் திணிக்காது என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன் என அவர் பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து