முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமரின் வழிகாட்டுதல்படி கொச்சி விமான நிலையத்தில் தின்பண்டங்களின் விலை குறைப்பு

திங்கட்கிழமை, 3 ஆகஸ்ட் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

கொச்சி :  பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின் படி கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் காபி, டீ மற்றும் தின்பண்டங்களின் விலை பன்மடங்கு குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி ரூ.100 க்கு விற்கப்பட்டு வந்த டீ ரூ.15-க்கு விற்கப்படுகிறது. அதேபோல் காபி ரூ. 20-க்கும், பருப்பு வடை, மெதுவடை உள்ளிட்டவை ரூ.15-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கேரள மாநிலம் கொச்சியில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. திருச்சூரைச் சேர்ந்த ஷாஜி என்பவர் அண்மையில் இந்த விமான நிலையத்தில் உள்ள ஒரு கடையில் டீ குடித்தார். அதனைத் தொடர்ந்து டீயின் விலை ரூ. 100 என கடைக்காரர் கூறியதும் ஷாஜி அதைக் கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து அவர் விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். ஆனால் அவர்கள் அதை கண்டுகொள்ளவில்லை.  அதனைத் தொடர்ந்து ஷாஜி தனது புகாரை பிரதமர் நரேந்திர மோடிக்கு இமெயில் மூலம் அனுப்பினார்.

அந்தப் புகாரின் அடிப்படையில் நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாக்க பிரதமர் முன்வந்தார். பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின் படி கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் காபி, டீ மற்றும் தின்பண்டங்களின் விலை பன்மடங்கு குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி ரூ.100 க்கு விற்கப்பட்டு வந்த டீ ரூ.15-க்கு விற்கப்படுகிறது. அதேபோல் காபி ரூ. 20-க்கும், பருப்பு வடை, மெதுவடை உள்ளிட்டவை ரூ.15-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து