Idhayam Matrimony

தங்கம் விலை சவரன் ரூ. 43,328-க்கு விற்பனை

வெள்ளிக்கிழமை, 7 ஆகஸ்ட் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.336 உயர்ந்து ரூ.43,328க்கு விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை கடந்த 2 மாதங்களாக யாரும் எதிர்பார்க்காத வகையில் தொடர்ந்து உயர்ந்து கொண்டே போகிறது. அந்த வகையில் ஒவ்வொரு நாளும் வரலாறு காணாத உச்சத்தை தொடர்ந்து தொட்டு வருகிறது. 

இந்த மாதம் தொடங்கியதில் இருந்து தங்கம் விலை உயர்வில் பெரிய மாற்றம் இல்லாமல் இருந்தது. ஆனால் அனைத்துக்கும் சேர்த்து நேற்று முன்தினம் ஒரேநாளில் தங்கம் ஒரு பவுன் ரூ.43 ஆயிரத்தை கடந்தது. 

இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.336 உயர்ந்து ரூ.43,328-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் ஒரு கிராமிற்கு ரூ.42 உயர்ந்து ரூ.5,416-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையும் ஒருபுறம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஒரு கிராம் 83 ரூபாய் 60 காசுக்கும், ஒரு கிலோ ரூ.83 ஆயிரத்து 600-க்கும் வெள்ளி விற்பனை செய்யப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து