தஞ்சை தி.மு.க. எம்.எல்.ஏ. நீலமேகத்திற்கு கொரோனா தொற்று பாதிப்பு

வெள்ளிக்கிழமை, 7 ஆகஸ்ட் 2020      தமிழகம்
Nilamekam 2020 08 06

Source: provided

தஞ்சாவூர் : தஞ்சை மாவட்ட தி.மு.க. எம்.எல்.ஏ. நீலமேகத்திற்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பொதுமக்கள் மட்டுமின்றி கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகளும், தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், போலீசார், தீயணைப்புத் துறையினர் என பலதரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

இந்த நிலையில் தஞ்சை மாவட்ட தி.மு.க. எம்.எல்.ஏ. நீலமேகத்திற்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 3 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து