அமெரிக்க ஓபன் டென்னிஸ் - சாம்பியன் பட்டம் வென்றார் டொமினிக் தீம்

திங்கட்கிழமை, 14 செப்டம்பர் 2020      விளையாட்டு
Dominic-theme 2020 09 14

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்கா ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் ஆஸ்திரியாவை சேர்ந்த டொமினிக் தீம் சாம்பியன் பட்டம் பெற்றார். 

அமெரிக்கா ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ஆஸ்திரியாவைச் சேர்ந்த டொமினிக் தீம், ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவுட மோதினார்.

முதல் செட்டை 6-2 என ஸ்வெரேவ் எளிதில் கைப்பற்றினார். இரண்டாவது செட்டையும் 6-4 என கைப்பற்றி அசத்தினார். மூன்றாவது செட்டில் தீம் ஆக்ரோஷமான ஆட்த்தை வெளிப்படுத்தினார்.

அதன்பயனாக அவர் 3-வது செட்டை 6-4 என கைப்பற்றினார். தொடர்ந்து 4வது செட்டையும் 6-3 என கைப்பற்றினார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5-வது செட்டிலும் தீம் ஆக்ரோஷமாக ஆடினார்.

இதனால் அந்த செட்டையும் 7-6 எனக் கைப்பற்றி அசத்தினார். இறுதியில், 2-6, 4-6, 6-4, 6-3, 7-6 (6) என ஸ்வெரேவை வீழ்த்தி டொமினிக் தீம் சாம்பியன் பட்டம் வென்றார்.

இந்தப் போட்டி 4 மணி நேரம் நடைபெற்றது. முதல் 2 செட்டை இழந்தாலும் தளராமல் ஆடி டொமினிக் தீம் இறுதியில் பட்டம் வென்றதுகுறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து