பா.ஜ.க. மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா

புதன்கிழமை, 16 செப்டம்பர் 2020      இந்தியா
CB-Radhakrishnan 2020 09 16

Source: provided

சென்னை : பா.ஜ.க. மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், கொரோனா தொற்றால் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மத்திய, மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

இந்நிலையில் பா.ஜ.க. மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது முகநூல் பதிவில் கூறுகையில், 

நான் கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன். எனது கொரோனா பரிசோதனை முடிவுகள் இன்று(நேற்று) காலை வெளியானது. அதில் எனக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளேன். உங்கள் பிரார்த்தனைகள் மற்றும் ஆசீர்வாதங்கள் மற்றும் வாழ்த்துக்களால் மிக விரைவில் குணமடைந்து இயல்பு நிலைக்கு திரும்புவேன்.

நான் விரைவில் குணமடைய வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் தெரிவித்து கொள்கிறேன்.  இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து