முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா பயணம்

வெள்ளிக்கிழமை, 23 அக்டோபர் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

சிட்னி : இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள், மூன்று 20 ஓவர் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

இதையொட்டி வீரர்களை தனிமைப்படுத்துதல் மற்றும் பயிற்சிக்கு ஏற்பாடு செய்வது தொடர்பாக சிட்னி நகரை உள்ளடக்கிய நியூசவுத்வேல்ஸ் மாகாண அரசுக்கும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

இதன்படி ஐ.பி.எல். முடிந்ததும் ஆஸ்திரேலியாவுக்கு புறப்படும் இந்திய வீரர்கள் கொரோனா தடுப்பு நடைமுறையாக சிட்னியில் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

இதே போல் ஆஸ்திரேலிய வீரர்களும் சிட்னியில் தங்களை தனிமைப்படுத்திக்கொள்வார்கள். அச்சமயம் அருகில் உள்ள பயிற்சி மையங்களில் பயிற்சியில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள். இந்த முடிவுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சம்மதம் தெரிவித்ததும் அதிகாரபூர்வ போட்டி அட்டவணை வெளியாகும்.

உத்தேச பட்டியலின்படி இந்திய அணி நவம்பர் 27, 29-ந்தேதிகளில் முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளை சிட்னியிலும், டிசம்பர் 1-ந்தேதி 3-வது ஆட்டத்தை கான்பெர்ராவிலும் விளையாடுகிறது. இவ்விரு நகரங்களிலேயே டிச.4, 6, 8-ந்தேதிகளில் 20 ஓவர் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

அதைத் தொடர்ந்து இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக டிச.17 முதல் 21-ந்தேதி வரை அடிலெய்டில் நடக்கிறது. தொடர்ந்து மெல்போர்ன் (டிச.26-30), சிட்னி (ஜன.7-11), பிரிஸ்பேன் (ஜன.15-19) ஆகிய நகரங்களிலும் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து