முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்: சிவசேனா

புதன்கிழமை, 28 அக்டோபர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

மும்பை : நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தியுள்ளது.

சிவசேனா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: -

சீனாவின் உதவியுடன் சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் அமல்படுத்த மெகபூபா முப்தி, பரூக் அப்துல்லா ஆகியோர் முயற்சித்தால் மத்திய அரசு கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். காஷ்மீரில் தேசியக்கொடி ஏற்றுவதை யாரேனும் தடுக்க முயற்சித்தால் அது ராஜ துரோகத்தை தவிர வேறு ஒன்றும் இல்லை. 

நாங்கள் முன்பே கூறியது போல, நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு அத்தகைய முடிவுகள் எதையும் எடுத்தால் நாங்கள் எங்கள் முடிவை அப்போது எடுப்போம்” என்றார். 

மராட்டியத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து சிவசேனா கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. சமீப காலமாக தனது பழைய கூட்டணி கட்சியான பாஜகவையும் மத்திய அரசையும் பல்வேறு விவகாரங்களில் சிவசேனா கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் மேற்கூறியவாறு பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து